முரசொலி தலையங்கம்

பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!

பத்துத் தோல்வி பழனிசாமி, பொதுக்குழு என்ற பெயரால் ஒரு கூட்டத்தைப் போட்டு, புலம்பித் தள்ளி இருக்கிறார். அ.தி.மு.க. தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர் அவர் என்று முரசொலி விமர்சித்துள்ளது.

பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

12.12.2025

பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1

பத்துத் தோல்வி பழனிசாமி, பொதுக்குழு என்ற பெயரால் ஒரு கூட்டத்தைப் போட்டு, புலம்பித் தள்ளி இருக்கிறார். அ.தி.மு.க. தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர் அவர். சொந்தக் கட்சிக்காரர்களால் கருப்புக் கொடி காட்டப்பட்டவர் என்ற புகழைப் பெற்றவர் பழனிசாமி.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததைத்தான் பலரும் குறை சொல்கிறார்களாம். மற்றபடி அப்பழுக்கற்ற ஆட்சியை அவர் கொடுத்தாராம். யாராலும் அவரது ஆட்சியைக் குறை சொல்ல முடியாதாம். தனது ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டே இல்லை என்றும் வாய்க்கு வந்ததை அள்ளிவிட்டுள்ளார் பழனிசாமி. அரங்குக்குள் வந்துவிட்டோமே என்று பலரும் அதனைக் கேட்டுத் தொலைத்துவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

தனது ஆட்சிக் காலத்து ஊழல்கள், நான்கரை ஆண்டுகள் ஆனதால் நாட்டு மக்களால் மறக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறார் பழனிசாமி. கமிஷனால் ஆட்சி நடத்தி, அதனைப் பிரித்துக் கொடுத்ததால் தனது நாற்காலியைத் தக்க வைத்துக் கொண்டவர் பழனிசாமி என்பதை, அவரைச் சுற்றி இருந்தவர்களே அறிவார்கள். அந்த ஒரு செயலால்தான், தன்னை இன்னும் சிலர் ஏற்றுக் கொண்டு, வணக்கம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பழனிசாமியும் அறிவார்.

பழனிசாமியின் பழைய ஊழல்கள் குறித்து பலமுறை நாம் எழுதி இருக்கிறோம். மீண்டும் நினைவூட்டுவோம். நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும்!

தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை தி.மு.க. வழங்கியது. முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் அதில் இடம்பெற்றிருந்தது.

நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறைகளில் மெகா டெண்டர் ஊழல், அமைச்சர்களும் – முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல், மின்சாரம் கொள்முதலில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், பாரத்நெட் டெண்டர் ஊழல், உயிர்காக்கும் கொரோனா கருவிகள் – மருந்துகள் வாங்குவதில் ஊழல், காக்னிசெண்ட் டெக்னாலஜி கம்பெனிக்கு பிளானிங் பெர்மிஷன் கொடுப்பதற்கு அமெரிக்க டாலரில் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல், எல்.இ.டி ஊழல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களில் ஊழல், மின் நிலையம் கட்டுமானப் பணிகளில் ஊழல் என்று முதலமைச்சர் திரு.பழனிச்சாமி மீதும்– அவரது அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் வந்ததை பட்டியல் போட்டுத் தரப்பட்டது.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் ஊழல், ஆவின் பாலில் ஊழல், ரேஷன் அரிசியில் ஊழல், மணலில் ஊழல், ப்ளீச்சிங் பவுடர், துடைப்பம் வாங்குவதில் ஊழல் என்று பலித்தது வரை எடுத்துவிடும் நோக்கத்துடன் அ.தி.மு.க. அமைச்சர்கள் தமிழக நிதி நிர்வாகத்தை நாசம் செய்ததை அந்த அறிக்கையில் பட்டியல் போட்டுக் கொடுத்தார்கள்.

பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!

பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதே அவர் மீது டெண்டர் வழக்குப் பாய்ந்தது. உடனடியாக உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கினார். தடை கிடைக்காமல் போயிருந்தால், ஜெயலலிதா அம்மா வழியில் அவர் பதவி விலகி இருக்க வேண்டும். தடை வாங்கியதால் முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்தார்.

‘’உங்கள் மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறதே?’ என்று நிருபர்கள் டெல்லியில் வைத்து அவரிடம் கேட்டார்கள். ‘’யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை” என்று சொன்னவர்தான் பழனிசாமி. எவ்வளவு புகழ்பெற்ற வாக்குமூலம் இது. இதனைக் கல்வெட்டாக வைத்து, அதற்குக் கீழே பழனிசாமி உட்கார்ந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இதுகுறித்து பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். இவைகளை தனது உறவினர்களுக்கே டெண்டராகக் கொடுத்துக் கொண்டார் பழனிசாமி என்பதுதான் குற்றச்சாட்டு. இதன் மூலம் பழனிச்சாமி, தனது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ் பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி 2018 அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் என்ன சொல்லப்பட்டது தெரியுமா?

‘’இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசுத் தரப்பு வாதமும் அதே நிலையில்தான் உள்ளது. மாநிலத்தின் முதல்வர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படும்போது, குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதுபோல் செயல்படவில்லை. இதுவே நீதிமன்ற அவமதிப்புதான்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி நேர்மையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றம் செய்வது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களும் கடைபிடிக்கப் பட்டுள்ளது. பொதுவாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையை கண்டிப்பாகக் கடைபிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.

அதிக அதிகாரம் கொண்டுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு வரும்போது அது தொடர்பாக நடத்தப்படும் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும்” என்று நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா குறிப்பிட்டார். இதை எல்லாம் நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று பழனிசாமி நினைக்கிறார்.

உடனே உச்சநீதிமன்றம் போய் தீர்ப்புக்கு தடை வாங்கிக் கொண்டார் பழனிசாமி. தனது தலையைக் காப்பாற்றிக் கொண்டார் பழனிசாமி.

–  தொடரும்...

banner

Related Stories

Related Stories