முரசொலி தலையங்கம்

“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

“குருமூர்த்தியாரின் காரணம்!” எனத் தலைப்பிட்டு, S.I.R-ன் குளறுபடியை விளக்கிய முரசொலி தலையங்கம்!

“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

எஸ்.ஐ.ஆர்.நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அதற்கான ஒரு காரணத்தை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, 'தினமணி' பத்திரிக்கையில் கட்டுரையாகத் தீட்டி இருக்கிறார்.

இந்தியாவில் சட்டவிரோதமாக வங்க தேசத்தவர்கள் குடியேறி வருகிறார்கள். அவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைதான் இது என்று சொல்லி இருக்கிறார். இப்படிச் சொல்பவர், தமிழ்நாட்டில் வங்க தேசத்தவர் எத்தனை லட்சம் பேர் குடியேறி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறாரா என்றால் இல்லை.

அவர் சொல்லும் புள்ளிவிபரம், அவரது வாதத்துக்கு எதிராகவே அமைந்துள்ளது. "இந்தியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக ஊடுருவி வசிக்கிறார்கள் என்பதற்கு இரு கட்சிகளின் சாட்சியங்களும் உள்ளன. 2001-இன் இறுதியில் இந்தியாவில் சுமார் 1.2 கோடி சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் வசித்து வந்ததாக கடந்த 2004 ஜூலை 14 அன்று டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

வெவ்வேறு மாநிலங்களுக்கான குறிப்பிட்ட எண்ணிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அஸ்ஸாமில் 50 லட்சம்; மேற்கு வங்கத்தில் 57 லட்சம்; பீகாரில் 4.79 லட்சம்; தில்லியில் 3.75 லட்சம்; திரிபுராவில் 3.25 லட்சம்; நாகாலாந்தில் 59,500; மேகாலயத்தில் 3,000, மகாராஷ்டிரத்தில் 20,000. 2016-ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மாநிலங்களவையில் அவர்களின் எண்ணிக்கை 2 கோடி என்று கூறியது. எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கும் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கம் தெளிவாக உள்ளது.

நிச்சயமாக இதை அவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது; இத்தனை கோடி வங்கதேச மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது சட்ட விரோதமானது மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; இதுதான் எஸ்.ஐ.ஆரில் உள்ள நன்மை" என்று இத்தனை நாட்கள் கழித்து கண்டுபிடித்து எழுதி இருக்கிறார் குருமூர்த்தி.

குருமூர்த்தி சொல்லும் பட்டியலில் தமிழ்நாடு இருக்கிறதா? தமிழ்நாட்டில் எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம் வங்க தேசத்தவர்கள் ஊருடுவி இருக்கிறார்கள் என்று இந்தப் பட்டியலில் இருக்கிறதா? இல்லை.

'வங்க தேசத்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்' என்று நாம் கேட்கிறோமா? யாராவது கேட்கிறார்களா? இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா, காட்டிய பூச்சாண்டியை குருமூர்த்தியும் இங்கு காட்டுகிறார்.

“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

வாக்காளர் பெயர் நீக்கம் குறித்து பீகாரில் ராகுல்காந்தியும், தேஜஸ்வீயும் மிகப் பிரமாண்டமான பரப்புரைப் பயணத்தைச் செய்த போது, "இது முழுக்க முழுக்க ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்கும் யாத்திரை.

ஊடுருவல்காரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டுமா? அவர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட வேண்டுமா? அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமா? வீடு வழங்கப்பட வேண்டுமா? ரூ. 5 லட்சம் வரையிலான காப்பீடு மூலம் இலவச சிகிச்சை வழங்கப்பட வேண்டுமா? நமது இளைஞர்களுக்காக அல்லாமல், வாக்கு வங்கி ஊடுருவல்காரர்களுக்காக வேலைவாய்ப்பை வழங்குகிறார் ராகுல் காந்தி.

தப்பித் தவறி அவர்களின் அரசாங்கம் அமைந்துவிட்டால் பீஹாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்காரர்கள் மட்டுமே இருப்பார்கள். எனவே, இது குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்படி எந்த நிலைமையாவது தமிழ்நாட்டில் இருக்கிறதா?

வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தையோ, சிறப்பு சீர்திருத்தத்தையோ செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. ஏன் அவசர அவசரமாகச் செய்கிறீர்கள், மழைக்காலத்தில் செய்கிறீர்கள், குழப்பமாகச் செய்கிறீர்கள், குளறுபடியோடு செய்கிறீர்கள், விண்ணப்பப் படிவங்களில் ஏன் குழப்புகிறீர்கள் என்றுதான் நாம் கேட்கிறோம். இதற்கு பதில் சொல்ல முடியாமல், 'ஊடுவல்காரர்களை நீக்கப் போகிறோம்' என்று பதில் சொல்கிறார்கள்.

குருமூர்த்தி அடுக்கும் ஊடுருவல்காரர்கள் பட்டியலில் முதலில் இருக்கும் மாநிலம் அசாம். அங்கு 50 லட்சம் ஊடுருவல்காரர்கள் இருப்பதாக அவர் சொல்கிறார். அசாம் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை இல்லையே? ஏன்?

“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்யும் 12 மாநிலங்களின் பட்டியலில் அசாம் இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதால் இதனைச் செய்யவில்லை. அதுதான் உண்மை. அல்லது அசாம் மாநிலத்தில் எந்த ஊடுருவல்காரர்களும் இல்லையா?

கடந்த ஆகஸ்ட் மாதம் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் இருப்பதை உறுதி செய்தார். ஸ்ரீபூமி மாவட்டத்தில் இருந்து 21 வங்கதேச ஊடுருவல்காரர்களை பாதுகாப்புப் படையினர் அண்டை நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஆகஸ்ட் 5 ஆம் தேதி சொல்லி இருக்கிறார்.

"இன்று நள்ளிரவில், தீய நோக்கங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்த 21 சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்கள் விடுவிக்கப்பட்டு, ஸ்ரீபூமி எல்லையிலிருந்து அவர்கள் சேர்ந்த வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று அசாம் முதலமைச்சர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார். ஆகஸ்ட் மற்றும், அதற்கு முந்தைய மாதங்களில் மட்டும் 400 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகச் சொன்னார்."அடையாளம் காணுதல் மற்றும் திருப்பி அனுப்புதல் தொடரும்" என்று அவர் அறிவித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய பலர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் தங்கள் பெயர்களை NRC-யில் சேர்த்துள்ளதாக மாநில அரசு கருதுகிறது என்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜூன் 9 அன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார். இதுதான் அசாம் நிலைமை ஆகும். அங்கே தானே எஸ்.ஐ.ஆரை கடுமையாக நடத்தி இருக்க வேண்டும்?

"தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிப்பதால் அசாம் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை (SIR) மேற்கொள்ளவில்லை" என்று தேர்தல் ஆணையம் சொன்னது சந்தேகத்துக்குரியது. 2019 ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 19.6 லட்சம் பேரை நீக்கியதாகச் சொன்னார்களே தவிர இறுதிப்பட்டியல் வெளியாகவில்லை. அவர்கள் அனைவரும் அசாமில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்களா எனத் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், 'அசாம் மாநிலத்துக்கு SIR பொருந்தாது' என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்.

இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன. அதனைத் தான் நாம் எதிர்க்கிறோம். மேலும், எல்லாவிதமான ஊடுருவல்காரர்களையும் நாம் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளோம்.

banner

Related Stories

Related Stories