முரசொலி தலையங்கம்

‘ஆபரேஷன் தாமரை’.. சிவசேனா விவகாரத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்ட பா.ஜ.க : முரசொலி கடும் தாக்கு!

‘மகாராஷ்டிரா சிவசேனை கூட்டணி பிளவுக்குப் பின்னணியில் பா.ஜ.க.’ என்று பி.பி.சி. மராத்தி மொழிப் பிரிவின் ஆசிரியர் ஆஷிஷ் தீக்சித் அப்போதே விரிவாக எழுதினார்.

‘ஆபரேஷன் தாமரை’.. சிவசேனா விவகாரத்தில்  ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்ட பா.ஜ.க : முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (25-02-2023)

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!

சிவசேனா விவகாரத்தில் பா.ஜ.க. நடந்து கொண்ட முறையானது, எத்தகைய ஜனநாயகக் கூறுகளிலும் அக்கட்சிக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.

தான் வெற்றி பெற முடியாவிட்டால், அடுத்த கட்சியைத் துண்டாடி அதனைச் சிதைத்து - தனக்கான அடிமைகளை உருவாக்கி– ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி - அதன் மூலம் தங்களை வெற்றி வீரர்களாக மார்தட்டிக் கொள்வதே அவர்களது பாணி ஆகும். அதுதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் – சிவசேனை கட்சி விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி இருந்து வந்தது. அதில் குழப்பத்தை ஏற்படுத்தியது பா.ஜ.க. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கணிசமான எம்.எல்.ஏ.க்கள் விலகினார்கள். சிவசேனா கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவாக உள்ள 40 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு தனது தலைமையில் தனி அணியை உருவாக்கினார். இதனால், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பா.ஜ.க. துணையுடன், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றது. இதையடுத்து சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. ‘தாங்கள்தான் உண்மையான சிவசேனா’ என முதல்வர் ஷிண்டே உரிமை கோரினார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதனால் இரு அணியினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறிவந்தனர்.

‘ஆபரேஷன் தாமரை’.. சிவசேனா விவகாரத்தில்  ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்ட பா.ஜ.க : முரசொலி கடும் தாக்கு!

இந்த விவகாரத்தை விசாரித்த தேர்தல் ஆணையம், உத்தவ் தாக்கரேயைவிட ஏக்நாத் ஷிண்டேவுக்கு அதிகமான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு உள்ளதைக் காரணமாகக் காட்டி, சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கே போய்ச் சேரும் என்று தீர்ப்பும் அளித்துவிட்டது. சிவசேனா கட்சிக்கு ரூ.186 கோடிக்கு அசையும் சொத்துகளும் அசையாச் சொத்துகளும் இருக்கின்றன. அத்துடன் வங்கிக் கணக்குகளில் 148.86 கோடி ரூபாய் உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிவசேனா கட்சியின் சொத்துகள், பணம் முழுவதும் தற்போது ஷிண்டே அணிக்குச் செல்கிறது. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முறையிட்டார். ‘தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு உடனே தடைவிதிக்க முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் ஷிண்டே அணியினர் 2 வாரத்தில் உரிய பதிலளிக்க வேண்டும்’ என நோட்டீஸ் அனுப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் முடிவின் அடிப்படையில் வேறு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவும் கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

‘ஆபரேஷன் தாமரை’.. சிவசேனா விவகாரத்தில்  ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்ட பா.ஜ.க : முரசொலி கடும் தாக்கு!

பா.ஜ.க. நினைத்தால் கட்சிகளை உடைத்து - ஆட்சிகளைக் கவிழ்த்து – கட்சியையும் அபகரிக்கலாம் என்பதன் சமீபத்திய சாட்சியங்களாக இவை அமைந்துள்ளன. தேர்தல் ஆணையம், தானே தீர்ப்பளித்தது என்று சொல்லி யாரும் தப்பிக்க முடியாது.

‘‘சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே திருடிச் சென்றுள்ளார். ‘இந்தியாவில் ஜனநாயகமே இல்லை, சர்வாதிகாரம் தொடங்கிவிட்டது’ என்று மோடி அறிவித்து விடலாம்” என்று சொல்லி இருக்கிறார் உத்தவ் தாக்கரே. ‘‘பா.ஜ.க.வுக்கு உதவும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது” என்று காங்கிரசு கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் ‘ஆபரேஷன் தாமரை’யின் மறைமுகத் திட்டங்கள் என்பதை மராட்டிய பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

‘மகாராஷ்டிரா சிவசேனை கூட்டணி பிளவுக்குப் பின்னணியில் பா.ஜ.க.’ என்று பி.பி.சி. மராத்தி மொழிப் பிரிவின் ஆசிரியர் ஆஷிஷ் தீக்சித் அப்போதே விரிவாக எழுதினார்.

சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சூரத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது உடனிருந்த மோஹித் கம்போஜ் மும்பையில் பாரதிய ஜனதா கட்சியின் நன்கு அறியப்பட்ட முகம். கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையின் டிண்டோஷி தொகுதியில் அவருக்கு பா.ஜ.க. டிக்கெட் கொடுத்தது. அவர்தான் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்களுடன் இருந்தார்.

‘ஆபரேஷன் தாமரை’.. சிவசேனா விவகாரத்தில்  ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்ட பா.ஜ.க : முரசொலி கடும் தாக்கு!

டாக்டர் சஞ்சய் குட்டே பா.ஜ.க.வின் இளைஞர் அணித் தலைவர். தேவேந்திர ஃபட்னாவிஸின் நம்பிக்கைக்குரியவர். சிவசேனையின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் குவஹாத்தியை அடைந்தபோது, குட்டேவும் அங்கு இருந்தார். சட்டப்பேரவையில் தேவேந்திர ஃபட்னாவிஸின் பின் பெஞ்சில் அமர்ந்திருப்பார் இவர்.

சிவசேனை கட்சியின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிராவை விட்டு பா.ஜ.க. ஆளும் குஜராத்துக்கு தான் சென்றார்கள். –- இவை எல்லாம் அப்போதே ஊடகங்களில் வெளியான தகவல்கள்தான். எனவே, தேர்தல் ஆணையம் தீர்மானித்து விட்டது என்று சொல்லித் தப்ப முடியாது. ‘‘தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது. கட்சிக்குள் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் பட்டியலைக் கேட்டது தேர்தல் ஆணையம். இதனை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். அவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் புறந்தள்ளிவிட்டு அவசர அவசரமாக இந்த முடிவை எடுத்துள்ளது. அவசர கதியில் இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் ஆணையத்தின் மீதே நம்பிக்கையை இழந்து விட்டோம். தேர்தல் ஆணையத்தைக் கலைக்க வேண்டும். நியமனமாக இல்லாமல் வாக்கெடுப்பு முறையில் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உச்சநீதி மன்றத்தில்தான் கடைசி நம்பிக்கையை வைத்துள்ளோம். அமைப்புகளின் உதவியுடன் ஜனநாயகத்தை அழிக்கும் பாதையில் பா.ஜ.க. செல்கிறது” என்று குற்றம் சாட்டி இருக்கிறார் உத்தவ் தாக்கரே.

தேர்தல் ஆணையத்தின் முடிவை ‘சொத்து பேரம்’ போல இருக்கிறது என்று, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘சாம்னா’ கிண்டலடித்திருக்கிறது. ‘கடையில் வேர்க்கடலை வாங்குவதைப் போல சின்னத்தை வாங்கி இருக்கிறார்கள்’ என்றும் அந்த ஏடு சொல்லி இருக்கிறது.

‘ஆளைச் சொல்லு ரூல்ஸைச் சொல்றேன்’ என்பதே பா.ஜ.க.வின் பாணியாகும்.

banner

Related Stories

Related Stories