முரசொலி தலையங்கம்

”மருத்துவப் படிப்பை வைத்து இத்தனை அட்டூழியங்களைச் செய்கிறார்கள்..” - 'நீட்’ அவலங்களை தோலுரித்த முரசொலி !

நீட் தேர்வில் எவ்வளவு குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களும் (தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்!) பணம் கொடுத்து மருத்துவம் படிக்க நுழைந்து விடலாம் என்பதே இன்றைய நிலைமை.

”மருத்துவப் படிப்பை வைத்து இத்தனை அட்டூழியங்களைச் செய்கிறார்கள்..” - 'நீட்’ அவலங்களை தோலுரித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (07-02-23)

‘நீட்’ அவலங்கள்!

‘நீட்’ அவலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அதனைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது ஒன்றிய அரசு. அவலங்களே அதிகமாக இருப்பதால்தான் அதனைத் தொடர்ந்து நடத்துவதில் ஆர்வமாக இருக்கிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பித் தான் ஆகவேண்டும்.

‘‘குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்க உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். எனவே, அதற்கான தகுதியைச் சோதிக்கவே ‘நீட்’ தேர்வை நடத்துகிறோம்’’ என்று வியாக்கியானம் சொன்னார்கள்.

ஆனால் இப்போது எவ்வளவு குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களும் (தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்!) பணம் கொடுத்து மருத்துவம் படிக்க நுழைந்து விடலாம் என்பதே இன்றைய நிலைமை. இதில் எங்கே இருக்கிறது தகுதியும், திறமையும். பணம் மட்டும் தான் மறுபடியும் முன்னே வந்து நிற்கிறது.

”மருத்துவப் படிப்பை வைத்து இத்தனை அட்டூழியங்களைச் செய்கிறார்கள்..” - 'நீட்’ அவலங்களை தோலுரித்த முரசொலி !

ஏழைகள், விளிம்புநிலை மக்கள், பட்டியலின -– பழங்குடியின - – பிற்படுத்தப்பட்டவர்களால் இவர்களது பயிற்சி மையங்களில் இலட்சங்களைக் கட்டி படிக்கவும் முடியவில்லை. தேர்ச்சி மட்டும் பெற்ற பிறகு பணங்களைக் கொடுத்து இடங்களைப் பெறவும் முடியவில்லை. இந்த உண்மை நிலைமை எப்போது உணர்ந்து ஒன்றிய அரசு திருந்தப் போகிறது என்று தெரியவில்லை. அதற்குள் எத்தனை மாணவர்களின் மருத்துவக் கனவு சிதையப் போகிறது என்றும் தெரியவில்லை.

இன்னொரு பக்கத்தில் இந்தத் தேர்வில் அதிகப்படியான மோசடிகள் நடந்ததும் வெளியானது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்தல் இதில் அதிகம் நடந்து, பலரும் கைது செய்யப்பட்டார்கள். பல மாணவர்களும் பெற்றோர்களும் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள். சில மையங்களில் எழுதுபவர்களை மட்டும் அதிக மதிப்பெண் போட வைக்கிறார்கள் என்றும், சில பயிற்சி மையத்தில் படித்திருந்தவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது என்றும் தகவல்கள் வெளியானது.

பாட்னாவைச் சேர்ந்த பிரேம்குமாரை 2021 ஆம் ஆண்டு காவல் துறை கைது செய்தது. “நான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 25 பேரை ஆள் மாறாட்டம் மூலமாக மாற்றி எழுத வைத்துள்ளேன்” என்று வாக்குமூலம் தந்தான் . அந்த 25 பேரின் தேர்வுத் தாளை நிறுத்தி வைக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு காவல்துறை கடிதம் எழுதியது. ஆனால் இந்த 25 பேரின் தேர்வுத் தாள் நிறுத்தி வைக்கப்பட்டதா, இல்லையா என்ற தகவல் இதுவரை இல்லை.

”மருத்துவப் படிப்பை வைத்து இத்தனை அட்டூழியங்களைச் செய்கிறார்கள்..” - 'நீட்’ அவலங்களை தோலுரித்த முரசொலி !

நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு, தங்களது பிள்ளைகளை மருத்துவம் படிக்க வைக்க அவர்களது பெற்றோர் எவ்வளவு தொகையை செலவு செய்கிறார்கள் என்பதை பட்டியலிட்டுள்ளது. இன்னொரு அமைப்பு, இந்த பயிற்சி மையங்கள் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் சம்பாதிக்கின்றன என்றும் சொல்லி இருக்கிறது. ‘இது தேர்வு அல்ல, கார்ப்பரேட் வணிகம்’ என்பதை மெய்ப்பித்து இருக்கின்றன இந்த அமைப்புகள்.

இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. 2022–-2023ஆம் கல்வியாண்டில் முதுகலை மருத்துவப் படிப்பில் காலியிடங்களுக்கான சிறப்புச்சுற்று முடிந்த பின்னரும் 1311 இடங்கள் நிரப்பப் படாமல் வீணாகி இருக்கிறது. MD/ MS/ DNB ஆகிய படிப்புகளுக்கான இடங்கள் காலியாகவே இன்னமும் இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 325 இடங்களும்- –

கர்நாடகாவில் 268 இடங்களும் - –

தமிழ்நாட்டில் 100 இடங்களும் -– அதிகபட்சமாக காலியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

”மருத்துவப் படிப்பை வைத்து இத்தனை அட்டூழியங்களைச் செய்கிறார்கள்..” - 'நீட்’ அவலங்களை தோலுரித்த முரசொலி !

இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவுக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘இது ‘நீட்’ கலந்தாய்வு முறையின் மோசமான தன்மையையும், ‘நீட்’ தேர்வால் ஏற்படும் பாதிப்புகளையும் மற்றும் மருத்துவ இடங்களை கையாள்வதில் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் மெத்தனமாக நடந்து கொள்ளும் விதத்தையும் அம்பலப்படுத்துகிறது. ஒவ்வொரு முதுகலை மருத்துவ இடமும் நாட்டின் தேசிய சொத்தாகும். எனவே, சிறப்பு இடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள கலந்தாய்வு முறையின் குளறுபடிகளால் இவை வீணடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள் இடஒதுக்கீட்டில் கணக்கிடப்படுவதால் பல தகுதி வாய்ந்த ஏழை, எளியவர்களுக்கு கலந்தாய்வு நடைமுறையில் நியாயமான முறையில் நடத்தப்படுவதில்லை. இதுதொடர்பாக நான் உங்களுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளேன். இந்த காலியிடங்களுக்கான தேதிகளை அவசர அவசரமாக அறிவித்து, அவசரம் காட்டப்பட்டதால், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு கலந்தாய்வின் பொழுதும், கவுன்சிலிங், காலிப்பணியிடங்கள் போன்றவற்றின் கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தை அணுகுவதில் நிறைய குழப்பங்களும் தாமதங்களும் ஏற்படுவதாலும், மாணவர்கள் சொல்ல முடியாத சிரமங்களுக்கு ஆளாவதாலும் DGHS முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

”மருத்துவப் படிப்பை வைத்து இத்தனை அட்டூழியங்களைச் செய்கிறார்கள்..” - 'நீட்’ அவலங்களை தோலுரித்த முரசொலி !

மெத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும், திறமையின்றியும் செயல்படும் சம்பந்தப்பட்ட DGHS அதிகாரிகளுக்கு இந்த அமைப்பில் இடமில்லை. அதுமட்டுமின்றி இந்த குழப்பத்திற்கு அவர்கள்மீது துறை ரீதியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

வழக்கமான கவுன்சிலிங்கிற்குப் பிறகும் மீதமுள்ள காலியிடங்கள், சிறப்பு காலியிடங்களுக்கான தனி கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட வேண்டும். அதனைச் செய்யவில்லை. மருத்துவப் படிப்பை வைத்துக் கொண்டு எத்தனை அட்டூழியங்களைச் செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

banner

Related Stories

Related Stories