வைரல்

ஆபாசமாக இயங்கும் அண்ணாமலை நடத்தும் War Room : பின்னணியில் அமர் பிரசாத் ரெட்டி - மாரிதாஸ் சொல்வது என்ன?

ஆபாசமாக இயங்கும் அண்ணாமலை நடத்தும் War Room : பின்னணியில் அமர் பிரசாத் ரெட்டி - மாரிதாஸ் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

யதமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், சொந்தக் கட்சியினருக்கு எதிராக நடந்த ஆடியோ, வீடியோ விவகாரம் பூதாகரமாகியுள்ளது. அதிலும் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த கே.டி. ராகவனின் அந்தரங்க வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை அதேகட்சியில் அடுத்தக்கட்ட பொறுப்பில் இருந்த மதன் ரவிசந்திரன் என்பவர் வெளியிட்டிருந்தார். இன்று அந்த நபர் பற்றிய எந்த விவரமும் தெரியாதது மர்மமே. ஆனால் அடுத்ததாக இந்த விவகாரத்தை பூதாகரமாக்கியது அண்ணாமலைதான் என்ற செய்தி சொந்தக் கட்சிகாரர்களுக்கு இடியாய் விழுந்தது என்றே சொல்லலாம்.

ஆபாசமாக இயங்கும் அண்ணாமலை நடத்தும் War Room : பின்னணியில் அமர் பிரசாத் ரெட்டி - மாரிதாஸ் சொல்வது என்ன?

சரி அடுத்த விவகாரம் வருவோம், கட்சியில் அடுத்த பொறுப்பில் இருந்த திருச்சி சூர்யா, அதேக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியை ஆபாச வார்த்தைகளால் பேசி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அக்கா - தம்பி விவகாரத்தை அரங்கேற வைத்த பங்கு அண்ணாமலைக்கு உண்டு. இந்த விவகாரத்தில் இன்னும் அண்ணாமலைக்கு அனுப்பிய வீடியோ லீக் ஆனது எப்படி என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.

இதனிடையே கட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய மற்றொரு பா.ஜ.க பெண் நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுத்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் நடவடிக்கையால் கொந்தளித்த காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து வெளியேறி அண்ணாமலையின் அரசியல் சூழ்ச்சிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

ஆபாசமாக இயங்கும் அண்ணாமலை நடத்தும் War Room : பின்னணியில் அமர் பிரசாத் ரெட்டி - மாரிதாஸ் சொல்வது என்ன?

இதில் கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் மீது திடீரென பா.ஜ.க கும்பல் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் வெளியிட்டு வந்தனர். இவற்றை அண்ணாமலையில் வார் ரூம் செய்வதாக அம்பலப்படுத்திய காயத்ரி ரகுராம், அண்ணாமலை வந்த பிறகு கட்சியில் ஹனிடிராப் அதிகரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இப்போது விசயத்திற்கு வருவோம்.. அது என்ன பா.ஜ.க வார்ரூம்? இந்த வார்ரூம் பொதுவாக அனைத்துக் கட்சிகளுக்கும் இருப்பது தான். சொந்தக் கட்சியின் சிந்தாங்களை வெகுஜன மக்களிடையே கொண்டுச் செல்ல சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் உத்தியாக இது பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் வார்ரூமை அண்ணாமலை தனக்காக பயன்படுத்திக்கொள்வதே இங்கு பிரச்சனையாக வெடித்துள்ளது.

ஆபாசமாக இயங்கும் அண்ணாமலை நடத்தும் War Room : பின்னணியில் அமர் பிரசாத் ரெட்டி - மாரிதாஸ் சொல்வது என்ன?

சமீபத்தில் பா.ஜ.க வார்ரூம் அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சிக்கும் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அரசியல் ரீதியாக விமர்சிக்காமல் தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக் தொடங்கியது. இது சொந்தக் கட்சியில் இருந்த பெண் என்று கூட பாராமல் காயத்ரி மீது பாய்வதே பலருக்கும் எரிச்சலை தந்தது.

இதனிடையே காயத்ரி ரகுராமிற்கு ஆதரவாக மாரிதாஸ் ட்விட்டரில், “காயத்ரி மீது அநாகரிக பதிவுகள் வெளியிடுவதைக் குறிப்பிட்ட பிரிவினர் உடனடியாக நிறுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதில் குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லை. இதைச் சகித்துக்கொள்ள முடியாது. நீங்கள் செய்வது விமர்சனமல்ல கொலை, அதுவும் உங்களை நம்பி பயனித்தவர்” எனத் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் மாரிதாஸை சாடியுள்ளது பா.ஜ.கவின் வார் ரூம்.

ஆபாசமாக இயங்கும் அண்ணாமலை நடத்தும் War Room : பின்னணியில் அமர் பிரசாத் ரெட்டி - மாரிதாஸ் சொல்வது என்ன?

அண்ணாமலையின் செயல் மட்டும்தான் இவ்வளவு மலிவாக போனதா என யோசனை வந்தால், இல்லை இல்லை.. அண்ணாமலையை மிஞ்சும் அளவுக்கு ஒரு மட்டமான மூளை அண்ணாமலை அருகில் இருக்கிறது என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.. அந்த மட்டமான மூலைக்கு சொந்தக் காரர்தான் அமர் பிரசாத் ரெட்டி.

யார் இந்த அமர் பிரசாத் ரெட்டி? அண்ணாமலையின் வருகைக்கு பின்னர் சொந்தக் கட்சிகாரர்களால் அறியப்பட்டவரே இந்த அமர் பிரசாத் ரெட்டி. இவரின் மீது திருச்சி சூர்யா, காயத்ரி என குற்றம் சாட்டிய நிலையில் இப்போது மாரிதாஸ் குற்றம் சாட்டியிருப்பது தான் கூடுதல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாசமாக இயங்கும் அண்ணாமலை நடத்தும் War Room : பின்னணியில் அமர் பிரசாத் ரெட்டி - மாரிதாஸ் சொல்வது என்ன?

அண்ணாமலைக்கு வலது - இடது என எல்லா கையுமே அமர் பிரசாத் ரெட்டிதான். வலதுசாரி ஆதரவாளரும், பா.ஜ.கவின் மறைமுக கொள்கை பரப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்த மாரிதாஸ் திடீரென அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக பொங்கியுள்ளார். அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக மாரிதாஸ் பேசுவதால் அவரை தள்ளி வைத்து பார்க்கத் தேவையில்லை. அவரும் ஒரே குட்டையில் மூழ்கிய.... மாறுதலுக்கு காலம்தான் பதில் சொல்லும்.

சரி மாரிதாஸ் வீடியோவிற்கு வருவோம். நேற்றைய தினம் மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அமர் பிரசாத் ரெட்டியை வார் ரூம் ரெட்டி என விமர்சித்துள்ளார். மேலும் அமர் பிரசாத் ரெட்டி, நேர்மை இல்லாதவர், எல்லா கட்சி தலைவரையும் சந்தித்து வருபவர், கொள்கை இல்லாதவர், மோசடி செய்தவர்களை பா.ஜ.க-வில் சேர்த்து கட்சிப் பெயரை பொதுமக்கள் மத்தியில் கலங்கப்படுத்தியவர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

ஆபாசமாக இயங்கும் அண்ணாமலை நடத்தும் War Room : பின்னணியில் அமர் பிரசாத் ரெட்டி - மாரிதாஸ் சொல்வது என்ன?

மேலும் தன்னை பற்றி பேசிய வீடியோ குறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும் இல்லையென்றால் அடுத்த வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவில் தமிழ்நாடு பா.ஜ.க அமர் பிரசாத் ரெட்டி என்ற பெருச்சாலியால் வீணாவதாகவும் புலம்பியுள்ளார். அதைத் தவிர அந்த வீடியோவில் பா.ஜ.கவுக்கு சொம்பு தூக்கிய சுயபுராண வரலாற்றைறையும் மாரிதாஸ் பேசியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

banner

Related Stories

Related Stories