மு.க.ஸ்டாலின்

ரமலான் திருநாளுக்காக கொளத்தூர் தொகுதி இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி!

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள் - பரிசுப்பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, தமது இல்லத்தில் தொடங்கி வைத்தார்.

ரமலான் திருநாளுக்காக கொளத்தூர் தொகுதி இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள் - பரிசுப்பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, தமது இல்லத்தில் தொடங்கி வைத்தார்.

முழு விவரம்:

ஆண்டுதோறும் கொளத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடையும் - ரம்ஜான் அன்று அவர்கள் அறுசுவை உணவு உண்ணத் தேவையான பொருட்களையும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கும், தமிழ்நாடு முதலமைச்சரும் - கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் இன்று (9-5-2021) தமது இல்லத்தில் - கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் - பரிசுப் பொருட்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 2,200 பேருக்கு கொளத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், அவர்கள் இல்லங்களுக்குச் சென்று புத்தாடையையும் பரிசுப் பொருட்களையும் வழங்க உள்ளனர். இன்று காலை, முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உடனிருந்தார்.

banner

Related Stories

Related Stories