தமிழ்நாடு

நாள்தோறும் புது புது சாதனைகள்! - பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில் தமிழ்நாடு முதலிடம்!

கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் மட்டும் தமிழ்நாடு முழுக்க 162 புதிய பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் புது புது சாதனைகள்! - பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில் தமிழ்நாடு முதலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கல்வி, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிசெய்து, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டுகிற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

அதற்கான சான்றுகளை, ஒன்றிய அரசின் தரவுகளே உறுதி செய்து வருகின்றன. அவ்வரிசையில், தற்போது பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது தமிழ்நாடு.

அதிலும், கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் மட்டும் தமிழ்நாடு முழுக்க 162 புதிய பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் புது புது சாதனைகள்! - பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில் தமிழ்நாடு முதலிடம்!

சுமார் 23 கோடி மக்கள் வாழும் உத்தரப் பிரதேசம் மாநிலத்திலேயே 2,240 பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்தான் இருக்கும் நிலையில், 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 2,429 மையங்கள் நவீன முறையில் சிறப்பாக இயங்கி வருகின்றன.

இதுவே, பா.ஜ.க.வின் தோல்வி மாடலுக்கும், தமிழ்நாட்டின் வெற்றிகரமான திராவிட மாடலுக்கும் இடையிலான வேறுபாடாகவும் அமைந்துள்ளது.

அண்மையில்தான், உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்ற பட்டியலும், இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிகொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு என்ற தரவும் வெளியிடப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிறப்புக்காலம் முதல் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்காலம் என தொடந்து வயது முதிர்வு காலம் வரை அனைத்து வயதினருக்குமான நலத்திட்டங்களை வழங்கி, அனைவரின் நலனையும் பேணும் அரசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயலாற்றி வருவதற்கான, சான்றுகளில் தற்போது இதுவும் ஒன்றாக இணைந்துள்ளது பெருமைக்குரியதாய் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories