தமிழ்நாடு

மாற்றத்தை எதிர்நோக்கிய பொது மக்களுக்கு முத்தான திட்டங்களை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்க கட்டணமில்லை. கையெழுத்திட்ட மறுநாள் முதலே திட்டத்தை அமல்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாற்றத்தை எதிர்நோக்கிய பொது மக்களுக்கு முத்தான திட்டங்களை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்றான நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்க கட்டணம் இல்லை என்ற திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற பின், தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர், கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்றான நகரப் பேருந்துகளில் பயணிக்க பெண்களுக்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது.

மாற்றத்தை எதிர்நோக்கிய பொது மக்களுக்கு முத்தான திட்டங்களை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதன்படி தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் பயணிக்க கட்டணமில்லை. சென்னையில் பல்வேறு வண்ண பேருந்துகள் இருப்பதால் வெள்ளை போர்டு வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் "மகளிர் பயணிக்க கட்டணம் இல்லை" என்ற வாசகம் ஒட்டப்பட்டுள்ளது. அன்றாடம் பேருந்தில் பயணிக்கும் தங்களுக்கு இந்த திட்டம் மிக பயனுள்ள திட்டம் என்று பெண்கள் மிகவும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதனிடையே, சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர மத்திய பேருந்து நிலையம் முன்பு இந்தத் திட்டத்தை வரவேற்று தொமுசவினர் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழகத்தில் 80 சதவிகிதம் சாதாரண பேருந்துகள் உள்ளது என்று கூறிய தொமுச பொருளாளர் நடராஜன், இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு பெண்கள் குறைந்தது 50 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்றும் மாதத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய் வரை பெண்கள் சேமிப்பு செய்யலாம் என்றார். தவிர, சென்னையில் கூடுதலாக நகரப்பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள 9800 நகர பேருந்தில் பயணிக்கும் 38.9% பெண்களுக்கு இது முத்தான திட்டம் என்றும் கூறினார் .

தேர்தல் அறிக்கையில் அறிவித்த இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. கோப்பில் கையெழுத்திட்ட மறுநாளே திட்டத்தை அமல்படுத்தியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சமயம், அடுத்தடுத்து திட்டங்களையும் அமல்படுத்தி சிறந்த ஆட்சியை தருவார் என்பதற்கு இதுவே சிறந்த தொடக்கம் என்கின்றனர் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்த பொதுமக்கள்.

banner

Related Stories

Related Stories