மு.க.ஸ்டாலின்

அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை!

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் மாநிலம் முழுவதும் தி.மு.கவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, வில்சன் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட பலரும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.

banner

Related Stories

Related Stories