இந்தியா

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : 73 MP-க்கள் நோட்டீஸ்!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர்கள் 73 பேர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : 73 MP-க்கள் நோட்டீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் ஒன்றிய பா.ஜ.க அரசின் செல்லுக்கும் கட்டளைக்கும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. நடந்தது வரும் 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை தவிர்த்து மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் தலைமைச் செயலாளர்களை மாற்றியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை எதரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதல் படி செயல்படும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது 9 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாநிலங்களவை எம்.பிக்கள் தகுதிநீக்க தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் ஞானேஷ்குமாரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலங்களவை எம்.பிக்கள் 73 பேர் மாநிலங்களவை செயலாளரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நீடிப்பது இந்திய அரசியலமைப்பின் மீதான ஒரு நேரடித் தாக்குதலாகும் என்று மாநிலங்களவை எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories