இந்தியா

சிக்கிக்கொண்ட பா.ஜ.க.வின் தேர்தல் நிலவரம் : தோல்வி அச்சத்தில் மோடி அரசு!

பா.ஜ.க.வின் முன்னோடி எனப்படுகிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய, தேர்தல் உள் ஆய்வில் வெளியான உண்மை. மூடி மறைக்க முற்படும் பாசிச பா.ஜ.க கும்பல்!

சிக்கிக்கொண்ட பா.ஜ.க.வின் தேர்தல் நிலவரம் : தோல்வி அச்சத்தில் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, வெற்றியடைய என்னென்ன குறுக்கு வழிகளை கையாள இயலுமோ, அவ்வனைத்தையும் செயலாற்றி வருகிறது பா.ஜ.க.

அவ்வாறு மோடியால், “இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், 400 தொகுதிகளை கைப்பற்றுவோம்” என தொடங்கப்பட்ட முழக்கம்,

காலப்போக்கில், “ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு நிலை தரும் சட்டம் 370-ஐ நீக்கியது போல, 370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என குறைக்கப்பட்டு,

தற்போது, வெளிவரும் கணிப்புகள் மூலம் மேலும் பா.ஜ.க.வின் வெற்றி விழுக்காடு குறைந்து வருகிறது. அதனை, உறுதிப்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வரும், ஆர்.எஸ்.எஸ் நடத்திய தேர்தல் கணிப்பு அட்டவணை அமைந்துள்ளது.

சிக்கிக்கொண்ட பா.ஜ.க.வின் தேர்தல் நிலவரம் : தோல்வி அச்சத்தில் மோடி அரசு!

இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், பெரிதளவில் நடப்பு நிலைக்கு ஒத்ததாக இருக்கும் சூழலில், தேசிய ஊடங்கங்களை மிரட்டியும், பணம் கொடுத்து தன் பக்கம் இழுத்தும் பொய்யான கணிப்புகளை வெளியிட்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு என்ற சூழல் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் பரவி வருகிற ஆர்.எஸ்.எஸ்-ன் அட்டவணை, போலி என்று நிரூபிக்க, கூடுதல் தில்லுமுல்லுகளுக்கு திட்டமிட்டு வருகிறது பா.ஜ.க.

banner

Related Stories

Related Stories