இந்தியா

”ஆளுர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும்” : உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து!

அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார்.

”ஆளுர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும்” : உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு தாங்கள் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சி மாநில அரசுகளுக்கு ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் இம்மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்கள்.

அண்மையில் கூட தமிழ்நாட்டில் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார். பின்னர் உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகுதான் அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஆளுநர்கள் தடையாக இருந்து வருகிறார்கள். நீதிமன்றம் வரை சென்று தங்களது உரிமைகளை நிலைநாட்டி வருகிறார்கள் மாநில அரசுகள்.

இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஐதராபாத் சட்டப் பல்கலைக்கழக கருத்தரங்கில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, " மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காததால் இப்போது எல்லாம் மாநில ஆளுநர்கள் வழக்கின் ஒரு புள்ளியாக இருக்கிறார்கள். அரசியலமைப்பின் கீழ் இது ஆரோக்கியமான போக்கு இல்லை. ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செயல்பட்டால்தான் இப்படியான வழக்குகள் குறையும். அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் ஆளுநர்கள் தங்களது கடமைகளைச் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories