இந்தியா

”2 வலிமையான பெண்களை பார்த்து பாஜக நிச்சயம் பயப்படும்” : அதிஷி மர்லினா அதிரடி!

2 வலிமையான பெண்களை பார்த்து பா.ஜ.க நிச்சயம் பயப்படும் என அமைச்சர் அதிஷி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

”2 வலிமையான பெண்களை பார்த்து பாஜக நிச்சயம்  பயப்படும்” :  அதிஷி மர்லினா அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு தங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. மேலும் எதிர்க்கட்சி ஆட்சிகளையும் கவிழ்க்கச் சதித் திட்டங்களை தீட்டி வருகிறது.

அப்படி டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்ற கோக்கில்தான் மதுபான கொள்ளை விவகாரத்தை எடுத்து தொடர்ச்சியாக முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வலுவடைந்ததை அடுத்து எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டும் வேகத்தை அதிகப்படுத்தியது. அதன் வெளிப்பாடாகத்தான் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை முதலில் கைது செய்தது.

பின்னர் அடுத்த சில நாட்களிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாநில முதல்வர்களை கைது செய்து தனது பாசிச முகத்தை வெளிப்படுத்தியுள்ளது பா.ஜ.க அரசு.

இருந்தும் டெல்லி ஆம் ஆத்மி அரசும், ஜார்க்கண்ட் அரசும் ஒன்றிய பா.ஜ.கவின் சதி செயல்களை துணிச்சலுடன் எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து ”ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பணியாற்றிய தங்கள் கணவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசின் மிருகத்தனமான அதிகாரத்திற்குப் பயப்படாத இரண்டு வலிமையான பெண்களின் நம்பிக்கையைப் பார்த்து பாஜக நிச்சயம் பயப்படும்” டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினா கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories