தமிழ்நாடு

கோவையில் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம்.. வனவிலங்குகளை பாதுகாக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு!

வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேற்று மதுக்கரை ரயில் பாதைகளில் ட்ரோன் கண்காணிப்பு பிரிவைத் தொடங்கி வைத்தார்.

கோவையில் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம்.. வனவிலங்குகளை பாதுகாக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது. மதுக்கரை வனப்பகுதிக்குள் செல்லும் ரயில் பாதைகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க, வனத்துறை முன்னரே ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன்கூட்டிய எச்சரிக்கை தரும் அமைப்பை நிறுவியது. இந்த முயற்சியின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்துடன் இணைந்து ரூ.8,672 கோடி செலவில் வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஒரு ட்ரோன் கண்காணிப்பு பிரிவு, இப்போது திறக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் வெப்ப அடையாளம் கண்டுணரும் திறன் கொண்ட 24X7 நேர கண்காணிப்பு அடிப்படையில் இணைக்கப்பட்ட ட்ரோன் அமைப்பு, யானைகளின் நடமாட்டத்தை சரியான நேரத்தில் கண்காணிக்க இத்தொழில் நுட்பம் கண்காணிப்பு கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பகுதியளவிலான காட்சிகளிலிருந்தும்கூட யானைகளின் இருப்பைக் கண்டறிந்து களத்தில் உள்ள குழுக்களுக்கு உடனடி எச்சரிக்கைகளை அனுப்புகிறது. யானைகள் ரயில் பாதைகளின் அருகில் கண்டறியப்பட்டதும், ஒலிபெருக்கிகள் மற்றும் தேடல் விளக்குகள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்களை மீட்புக் குழுக்கள் பயன்படுத்துவதன் மூலம் யானைகளை வனப்பகுதிகளுக்குள் பாதுகாப்பாக வழிநடத்த உதவுகின்றன. இதன் மூலம் மனித-வனவிலங்கு மோதல் மற்றும் ரயில் விபத்துகள் தடுக்கப்படும்.

banner

Related Stories

Related Stories