இந்தியா

புதுச்சேரி : சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழிசை... வெளியேறுமாறு மக்கள் எதிர்ப்பு !

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி : சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழிசை... வெளியேறுமாறு மக்கள் எதிர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் வசிக்கும் தம்பதியின் 9 வயது மகள் கடந்த 2-ம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். குடும்பத்தினர் சுற்றிலும் தேடி பார்த்த நிலையில், சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விரைந்து தேடி வந்தனர்.

எனினும் சிறுமி கிடைக்காத நிலையில், நேற்று கால்வாய் பகுதியில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

புதுச்சேரி : சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழிசை... வெளியேறுமாறு மக்கள் எதிர்ப்பு !

அந்த பகுதியில் பலரையும் பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரிக்கையில் கஞ்சா போதையில் சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்யும்போது உயிரிழந்துவிட்டதாகவும், இதனை மறைக்கவே சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் தூக்கி வீசியதாகவும் தெரிவித்தனர்.

தற்போது அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது புதுவை பாஜக கூட்டணி அரசு போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அஞ்சலிக்காக வைத்தனர்.

புதுச்சேரி : சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழிசை... வெளியேறுமாறு மக்கள் எதிர்ப்பு !

அப்போது சிறுமியின் பெற்றோருக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்த சென்றபோது, அவருக்கு பொதுமக்கள், சிறுமியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த இளைஞர்கள், உறவினர்கள் தமிழிசையை வெளியேறுமாறு கோஷமிட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

சிறுமியின் மறைவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் கஞ்சா போதை அதிகரிப்புக்கு காரணமான புதுவை பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து நாளை மறுநாள் முழு கடையடைப்பு போராட்டத்தை இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது. சிறுமி வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து தற்போது பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories