இந்தியா

நள்ளிரவில் காணாமல்போன புலம்பெயர் தொழிலாளியின் மகள்.. இரத்த கோரத்தில் வயலில் கிடந்த அவலம் - கேரளாவில் ஷாக்

நள்ளிரவில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வயலில் தூக்கி வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நள்ளிரவில் காணாமல்போன புலம்பெயர் தொழிலாளியின் மகள்.. இரத்த கோரத்தில் வயலில் கிடந்த அவலம் - கேரளாவில் ஷாக்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய கேரளாவில் அமைந்துள்ளது ஆலுவா. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மனைவி 8 வயது சிறுமி என தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் வழக்கம்போல் அவர்கள் சாலையோரம் தூங்கி கொண்டிருக்கையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நபர் ஒருவர் 8 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

திடீரென காலையில் எழுந்து பார்த்த தாய், தனது மகளை காணவில்லை என்று தேடி அழைத்துள்ளார். அப்போது அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்த நபர் ஒருவர் 2 மணியளவில் சிறுமி ஒரு நபருடன் சென்றதை கண்டதாக தெரிவித்தார். இதையடுத்து அதனை சுற்றியுள்ள பகுதியில் தேடிய போது, சிறுமி வயலில் கோரமான நிலையில் இருந்துள்ளார்.

நள்ளிரவில் காணாமல்போன புலம்பெயர் தொழிலாளியின் மகள்.. இரத்த கோரத்தில் வயலில் கிடந்த அவலம் - கேரளாவில் ஷாக்

இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததோடு போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டதில் அதே திருவனந்தபுரம் பாறசாலை செங்கல் வட்டங்கரையைச் சேர்ந்த கிறிஸ்டின் (36) என்பவர் சிக்கினார்.இதையடுத்து ஆலுவா பாலத்தின் கீழ் பதுங்கி இருப்பதாக கிடைக்கபட்ட தகவலின் பேரில் விரைந்து சென்ற போலிசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

நள்ளிரவில் காணாமல்போன புலம்பெயர் தொழிலாளியின் மகள்.. இரத்த கோரத்தில் வயலில் கிடந்த அவலம் - கேரளாவில் ஷாக்

தொடர்ந்து விசாரிக்கையில், கிறிஸ்டின் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் கடந்த 2022-ம் ஆண்டு பெரும்பாவூரில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், ஆகஸ்ட் 10ம் தேதி வியூர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அதோடு இவர் மீது வயதான பெண்ணை சித்திரவதை செய்த வழக்கும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி மருத்துவமனையில் தற்போது தீவி சிகிச்சை பெற்று வருகிறார். நள்ளிரவில் புலம்பெயர் தொழிலாளியின் 8 வயது மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வயலில் தூக்கி வீசி சென்ற நபரின் செயல் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories