இந்தியா

10 ரூபாய் கொடுத்து சிறுமி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய 68-வயது முதியவர்.. நடந்தது என்ன ?

5-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலிஸார் கைது செய்தனர்.

10 ரூபாய் கொடுத்து சிறுமி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய 68-வயது முதியவர்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள கோரிபாரி என்னும் இடத்தில 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டுக்கு அருகில் 68-வயது முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். பக்கத்து வீடு என்பதால் முதியவர் சிறுமியிடம் அடிக்கடி பேசி வந்திலர்.

இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்னர் அந்த முதியவர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக அந்த சிறுமி இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால், இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த முதியவர் அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு ஒவ்வொரு முறை பாலியல் வன்கொடுமை செய்யும்போதும் அந்த சிறுமிக்கு 10 ரூபாய் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

10 ரூபாய் கொடுத்து சிறுமி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய 68-வயது முதியவர்.. நடந்தது என்ன ?

ஆனால், ஒருகட்டத்தில் அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிஸார் அந்த முதியவரை கைது செய்தனர்.

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories