இந்தியா

இரவு நேரத்தில் வாக்கிங்.. ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி !

இரவு நேரத்தில் வாக்கிங் சென்று விட்டு ஆட்டோவில் தனியாக வீடு திரும்பிய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் வாக்கிங்.. ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஹரியானா மாநிலம் ஃபதிராபத் (Faridabad) பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார், தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இவர், அடிக்கடி நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்படியே நடந்துகொண்டு சிறிது தூரம் வரை சென்ற அவர், சுமார் இரவு 10 மணியளவில் திரும்ப வீட்டுக்கு நடந்து செல்லமுடியாமல் தவித்துள்ளார். எனவே அங்கிருக்கும் ஆட்டோ ஒன்றில் ஏறி, தனது வீட்டுக்கு செல்ல நினைத்துள்ளார். அதன்படி ஆட்டோவில் ஏறிய அவர் சென்றுகொண்டிருக்கும்போதே, திடீரென வழியில் 2 ஆண் நபர்கள் ஆட்டோவில் ஏறியுள்ளனர்.

இரவு நேரத்தில் வாக்கிங்.. ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி !

தொடர்ந்து ஆட்டோவை ஆள் இல்லாத புதர் பகுதி அருகே கொண்டு சென்ற ஓட்டுநர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கூட வந்த 2 பேர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் வன்கொடுமை செய்ய முயன்றபோது அவரிடம் இருந்து தப்பித்து சாலைக்கு ஓடி சென்று உதவி கேட்டார்.

அப்போது அந்த பெண்ணை கண்ட ஒருவர் அவரை அழைத்து காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டபோது குற்றவாளிகளான சனோஜ், விஷ்ணு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாகி இருக்கும் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் வாக்கிங் சென்று விட்டு ஆட்டோவில் தனியாக வீடு திரும்பிய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories