இந்தியா

புகாரளிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. போலீஸாரின் வெறிச்செயல்.. ஹரியானாவில் அதிர்ச்சி !

புகாரளிக்க சென்ற பெண் கூட்டு போலீஸாரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகாரளிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. போலீஸாரின் வெறிச்செயல்.. ஹரியானாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹரியானா மாநிலம் ஹசன்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரின் கணவர் கொடுமை செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது கணவர் மீது புகார் அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குள்ள காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு உதவி ஆய்வாளர் ஷிவ் சரண் என்பவர் பணியில் இருந்துள்ளார்.

அவரின் அந்த பெண் கணவர் குறித்து புகாரளித்த போது, அதனை ஏற்க மறுத்த அவர், அந்த பெண்ணை அவரின் உதவியாளர்களாக நிரஞ்சன், பீமா, பல்லி ஆகியோருடன் அந்த படுத்தியில் இருந்த வயல்வெளிக்கு இழுத்துச் சென்று அங்கு அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதோடு நிற்காத அவர்கள், அந்த பெண்ணை சாந்தி என்ற பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இரவு முழுவதும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அந்த காவல்துறையினர், பிஜேந்திரா என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

புகாரளிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. போலீஸாரின் வெறிச்செயல்.. ஹரியானாவில் அதிர்ச்சி !

மேலும், அந்த பெண்ணை வாங்கிய பிஜேந்திராவும் அந்த காவல் அதிகாரிகள் முன்னிலையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதனை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்து அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து அந்த பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். அப்போது அவர்களின் ஒருவரின் மொபைல் போன் அந்த பெண்ணுக்கு கிடைத்த நிலையில், அதனைத் வைத்து தனக்கு நடந்த கொடுமை குறித்து காவல்துறைக்கு அந்த பெண் தகவல் அளித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஷிவ் சரண் உள்ளிட்ட 7 பேர் வழக்கு பதிவு செய்த போலிஸார், தொடர்ந்து இதில் வேறு யாரும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories