அரசியல்

"நான் தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறேன்.. இங்கு மக்களிடையே வெறுப்புணர்வு இல்லை".. Dr.கபீல் கான் கருத்து !

தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்த மருத்துவர் கபீல் கான், தமிழ்நாடு குறித்து பேசியுள்ள கருத்துக்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

"நான் தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறேன்.. இங்கு மக்களிடையே வெறுப்புணர்வு இல்லை".. Dr.கபீல் கான் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். அப்போது உடனடியாக செயல்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவியபோது, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் கபீல் கான்.

மேலும், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 63 குழந்தைகள் உயிரிழந்ததை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார்.ஆனால், உத்தர பிரதேச பாஜக அரசு, தனது தவறை மறைப்பதற்கு, மருத்துவர் கபீல்கான் மீதே பழியைத் தூக்கிப் போட்டது. அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், கபீல் கான் விடுதலையானார்.

குறிப்பாக குழந்தைகள் உயிரிழப்பில் கபீல் கானுக்கு எந்த தொடர்பும் இல்லை என விசாரணை கமிஷன் தெரிவித்த போதிலும், அரசுப் பொறுப்பில் இருந்து கபீல்கானை விடுவித்த யோகி அரசு, தற்போது குற்றமற்றவர் என தெரிந்த பிறகும் மீண்டும் பணி வழங்காமல் இருந்துள்ளார். மேலும் அவருக்கு ஏராளமான இடைஞ்சல்களை பாஜக அரசு கொடுத்து வந்தது.

"நான் தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறேன்.. இங்கு மக்களிடையே வெறுப்புணர்வு இல்லை".. Dr.கபீல் கான் கருத்து !

இதனிடையே தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்த மருத்துவர் கபீல் கான், தற்போது இங்கு மருத்துவம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு குறித்து அவர் பேசியுள்ள கருத்துக்கள் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு குறித்து பேசியுள்ள அவர், நான் தமிழ்நாட்டில்தான் தற்போது வேலைபார்த்துவருகிறேன். äஆனால், இங்குள்ள மக்களிடம் எந்த வெறுப்புணர்வும் இல்லை. இங்கு எல்லா வீட்டிலும் சாமி அறை சிறிய அளவிலாவது இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் என்னை ஒரு இஸ்லாமிய மருத்துவராக பார்த்ததில்லை. குழந்தைகள் நல மருத்துவராக மட்டுமே பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மருத்துவமனைக் கல்லூரிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. பொதுத் தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற ஒருவர் மருத்துவராக முடியாது, அதே சமயம், 20% மதிப்பெண் நீட் தேர்வில் பெற்றாலே மருத்துவராக முடியும் என்பது அநீதி இல்லையா?. இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories