விளையாட்டு

எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!

0-2... 2-2... 3-2... என்ற இந்த மூன்று எண்கள்தான், உலகக் கோப்பை வரலாற்றில் அர்ஜென்டினாவின் மிகச் சிறந்த கம்பேக் வெற்றிகளில் ஒன்று என்பதை என்றென்றும் நினைவுபடுத்தும்!

எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

FIFA உலகக் கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, உலக கால்பந்து ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்து ஒரு பரபரப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

ஆட்டத்தின் முதல் 70 நிமிடங்கள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த எகிப்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த உலகக் கோப்பை அர்ஜென்டினாவின் கைகளை விட்டு நழுவிவிட்டதாகவே அனைவரும் நினைத்தனர். ஆனால், சாம்பியன் அணிக்கே உரிய போராட்ட குணத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி தலைமையிலான அணி, கடைசி 13 நிமிடங்களில் மூன்று கோல்கள் அடித்து 3-2 என்ற அதிரடி வெற்றியுடன் அரையிறுதிக்குள் முன்னேறியது.

ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் அடித்த கோலின் மூலம் எகிப்து கணக்கை தொடங்கியது. தொடர்ந்து ஒழுங்கான பாதுகாப்பும் எதிர்தாக்குதலும் மூலம் அர்ஜென்டினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இரண்டாம் பாதியின் 67-வது நிமிடத்தில் மோஸ்டஃபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடிக்க, எகிப்து 2-0 என முன்னிலை பெற்றது.

எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!

அதுவரை அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் தவித்தனர். முதல் பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் லியோனல் மெஸ்ஸி தவறவிட்டதால், ரசிகர்களின் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர்.

ஆனால் 79-வது நிமிடத்தில் போட்டியின் திரைக்கதை மாறியது. மெஸ்ஸி எடுத்த ஃப்ரீ கிக்கில் வந்த பந்தை கிரிஸ்டியன் ரொமெரோ தலையால் முட்டி கோலாக மாற்ற, அர்ஜென்டினாவுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. அந்த ஒரே கோல், அணியின் ஆட்டத்தையும் ரசிகர்களின் நம்பிக்கையையும் முழுமையாக மாற்றியது.

அதன் பிறகு வெறும் நான்கு நிமிடங்களில், 83-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி தனது அபாரமான ஷாட்டின் மூலம் சமநிலை கோலை அடித்தார். முதல் பாதியில் பெனால்டியை தவறவிட்ட ஏமாற்றத்தை, அந்த ஒரு கோலால் துடைத்தெறிந்தார். அடுத்த நொடிய அரங்கம் முழுவதும் "மெஸ்ஸி... மெஸ்ஸி..." என்ற முழக்கங்கள் எதிரொலிக்க, அர்ஜென்டினா மீண்டும் உயிர்பெற்றது.

எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!

போட்டி கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், 90+2-வது நிமிடத்தில் லவுடாரோ மார்டினஸ் வழங்கிய துல்லியமான கிராஸை என்ஸோ பெர்னாண்டஸ் தலையால் கோலாக மாற்றி, அர்ஜென்டினாவுக்கு மறக்க முடியாத வெற்றியை தேடித் தந்தார். இறுதி விசில் ஒலித்ததும், 0-2 என்ற பின்னடைவிலிருந்து 3-2 என வெற்றியைப் பறித்த மகிழ்ச்சியில் அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

2022 உலகக் கோப்பையை வென்ற அதே உறுதி... அதே போராட்ட மனப்பான்மையுடன் களமிறங்கிய அர்ஜென்டினா, "சாம்பியன் பட்டம் எங்களுடையதே" என்ற செய்தியை உலகுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் மேலும் வலுவாக மாறி வரும் அந்த அணி, கோப்பையை தக்கவைக்கும் மிகப்பெரிய போட்டியாளராக திகழ்கிறது.

இதுஒருபுறம் இருக்க, மறுபுறம், சில ரசிகர்கள் மற்றும் கால்பந்து விமர்சகர்கள் நடுவரின் சில முடிவுகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். கூடுதல் நேரம், சில ஃபவுல் முடிவுகள் மற்றும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!

0-2 என்ற பின்னடைவில் இருந்த ஒரு அணி, கடைசி 13 நிமிடங்களில் மூன்று கோல்கள் அடித்து வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அதனால்தான், அர்ஜென்டினாவின் ஆட்டத்தில் சில குறைகள் இருந்தாலும், கடைசி வரை போராடும் மனப்பான்மைதான் அவர்களை உலக சாம்பியன்களாக காட்டுகிறது என்ற பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இறுதியாக, 0-2... 2-2... 3-2... என்ற இந்த மூன்று எண்கள்தான், உலகக் கோப்பை வரலாற்றில் அர்ஜென்டினாவின் மிகச் சிறந்த கம்பேக் வெற்றிகளில் ஒன்று என்பதை என்றென்றும் நினைவுபடுத்தும்!

banner

Related Stories

Related Stories