இந்தியா

தன்னுடன் பேசாததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடுமை.. பாஜக ஆளும் மாநிலத்தில் கொடூரம் !

தனக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த இளம்பெண், தன்னிடம் பேசாததால் இளைஞர் ஒருவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அவரது அந்தரங்க பகுதியில் மிளகாய் வைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.

தன்னுடன் பேசாததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடுமை.. பாஜக ஆளும் மாநிலத்தில் கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. மேலும் குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அநீதிகள் அதிக அளவில் காணப்படுவதாக இருப்பதாக ஒரு அறிக்கையும் தெரிவிக்கிறது. அந்த வகையில் தற்போதும் கூட அங்கே இளம்பெண் ஒருவரை, இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நிகுஞ்ச் குமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில், பணி நிமித்தமாக நிகுஞ்ச் குமார் சூரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

தன்னுடன் பேசாததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடுமை.. பாஜக ஆளும் மாநிலத்தில் கொடூரம் !

அந்த சமயத்தில் நிகுஞ்ச் குமாருக்கு இளம்பெண் ஒருவரது அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அந்த பெண்ணிடம் தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்து பேசி வந்துள்ளார். தொடர்ந்து இருவரும் காதலிக்கவும் தொடங்கியுள்ளனர். இருவரும் அடிக்கடி வெளியே சென்று தங்கள் காதலை கொண்டாடியுள்ளனர்.

இந்த சூழலில் நிகுஞ்ச் குமாருக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் இந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் அவருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த பெண் அவருடன் பேசாமல் இருந்துள்ளார். தொடர்ந்து நிகுஞ்ச் குமார் போன் செய்தாலும், அவரை தவிர்த்து வந்துள்ளார்.

தன்னுடன் பேசாததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடுமை.. பாஜக ஆளும் மாநிலத்தில் கொடூரம் !

இதனால் ஆத்திரமடைந்த நிகுஞ்ச் குமார் அந்த பெண்ணை பழிவாங்க எண்ணியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று தனியாக சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை, கடத்தி தனியாக அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அவரை கேபிள் ஒயரால் அடித்து தாக்கி சித்திரவதை செய்துள்ளார். அதோடு அவரை பாலியல் வன்கொடுமையும் செய்து துன்புறுத்தியுள்ளார்.

தன்னுடன் பேசாததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடுமை.. பாஜக ஆளும் மாநிலத்தில் கொடூரம் !

இருப்பினும் ஆத்திரம் தீராத அந்த இளைஞர், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் வைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார். மேலும் அதனை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து இதனை வெளியில் சொன்னால் வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் உள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.

தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனக்கு நேர்ந்ததை இளம்பெண் கூறவே, உடனே நிகுஞ்ச் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories