இந்தியா

78 இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றிய சாமியார்.. இந்து இளைஞர்களுடன் நடந்த திருமணம்.. வெளிவந்த ’Real UP Story’!

இந்து சாமியார் ஒருவர் 78 இஸ்லாமிய பெண்களை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைத்த உண்மை சம்பவம் வெளியாகியுள்ளது.

78 இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றிய சாமியார்.. இந்து இளைஞர்களுடன் நடந்த திருமணம்.. வெளிவந்த ’Real UP Story’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை லவ் ஜிஹாத் என்ற முறையில் முஸ்லிமாக மாற்றியுள்ளனர் என்று காட்சி படுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை திரைப்படமாக எடுப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது இந்து சாமியார் ஒருவர் 78 இஸ்லாமிய பெண்களை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைத்த உண்மை சம்பவம் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநில பரேலியில் உள்ள மதினாத் பகுதியில் அமைந்து இருக்கும் அகஸ்தியா முனி ஆசிரமத்தில் ஆச்சாரியார் பண்டிட் கேகே சங்காதர் என்பவர் வசித்து வருகிறார்.

78 இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றிய சாமியார்.. இந்து இளைஞர்களுடன் நடந்த திருமணம்.. வெளிவந்த ’Real UP Story’!

பல்வேறு இந்துத்துவ கும்பல்களுடன் தொடர்பில் இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் கணக்குகள் வைத்திருந்துள்ளார். அதில் தன்னிடம் பேசும் இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றம் செய்து அவர்களை அவர்களின் இந்து காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இவ்வாறு சுமார் 78 முஸ்லிம் பெண்களை சாமியார் இந்து மதத்துக்கு மாற்றம் செய்து திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இவர் குறித்த தகவலின் அடிப்படையில் இந்தி நாளிதழ் குழு சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முத்த முறை ஒரு பெண்ணை இந்துவாக மாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும், அதற்கு அடுத்து பல இஸ்லாமிய பெண்களை இதே போன்று மதம் மாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் வெளியாகி இந்துத்துவ கும்பலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories