அரசியல்

ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற RSS அமைப்பில் உள்ள விஞ்ஞானி.. விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை !

கைது செய்யப்பட்ட பிரதீப் குருல்கர் நீண்ட நாள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளதால் இந்த விவகாரத்தில் அந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சி கோரிக்கை .

ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற RSS அமைப்பில் உள்ள விஞ்ஞானி..  விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகத்தில் பிரதீப் குருல்கர் என்பவர் இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இவரிடம் சில பெண்கள் ஆபாச ரீதியில் பழகி வந்துள்ளனர்.

அவர்கள் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பினர் இந்திய ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை பெற்று வந்துள்ளனர். மேலும் பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவு ஏஜெண்ட்டிடம் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார்.

ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற RSS அமைப்பில் உள்ள விஞ்ஞானி..  விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை !

இது குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 3-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தியபோது வெளிநாட்டில் பயணம் செய்தபோது ராணுவ ரகசியங்களை சிலரிடம் பகிர்ந்த தகவலும் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற RSS அமைப்பில் உள்ள விஞ்ஞானி..  விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை !

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரதீப் குருல்கர் நீண்ட நாள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளதால் இந்த விவகாரத்தில் அந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக பிரதீப் குருல்கர் ஆர்.எஸ்.எஸ் உடையில் மேடையில் பேசிய புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories