அரசியல்

“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட 4 பகுதியில் இன்று (செப்.26) திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தாரபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யா அவர்களை ஆதரித்து நத்தப்பாளையம், மூலனூர், கொளத்துப்பாளையம் மற்றும் குண்டடம் ஆகிய 4 இடங்களில் எதிர்க்கட்சித் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், 5 மாதத்திற்கு முன்னாடி இதே தாராபுரத்துக்கு வந்தேன். ’உதயசூரியன்’ சின்னத்தில நீங்க வாக்களிக்கணும் அப்படின்னு உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் வச்சேன். நீங்களும் வாக்களிச்சு ஜெயிக்க வைக்கிறேன்னு சொன்னீங்க, ஆனா வெற்றி வாய்ப்பை இழந்துட்டோம். இன்னைக்கு மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வந்திருக்குன்னா அதற்கு யார் காரணம்னு உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில ஆட்சி அமைக்கணும்னா ஒரு கட்சிக்கு குறைந்தது 118 சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும். ஆனால் இன்னைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த ஆட்சி ஒரு அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஆட்சியா? வெறும் 107 எம்.எல்.ஏக்-களைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பிச்சீங்க.

“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!

இந்த முறை அந்த தப்பை செஞ்சிடக் கூடாது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் எஸ்.சுகன்யா அவர்களுக்கு வாக்களித்து, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

நம் கழகத் தலைவர் அவர்கள் எஸ். சுகன்யா அவர்களை உங்களிடத்தில் ஒப்படைச்சிருக்காங்க. போன முறை செஞ்ச தவறை மீண்டும் செய்ய மாட்டீர்கள் என்ற அந்த நம்பிக்கையில உங்ககிட்ட ஒப்படைச்சிருக்காங்க. நம்முடைய வெற்றி வேட்பாளர் சகோதரி சுகன்யா நன்கு படித்தவர், வழக்கறிஞர். உங்களுக்காக, உங்களுடைய தொகுதிக்காக, இந்த பகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் நிச்சயம் குரல் கொடுக்கக்கூடியவர்.

இன்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லாம் சட்டமன்றத்தில என்ன பண்றாங்கன்னு நீங்கெல்லாம் தொலைக்காட்சியில நேரடியா பார்த்துட்டு இருக்கீங்க. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்கிறாங்க.

சட்டசபையில் நான் பேசும்போது, ”உங்களுக்கு அறுதி பெரும்பான்மை கிடையாது, மெஜாரிட்டி கிடையாது. 118 எம்.எல்.ஏ-க்கள் வேணும், உங்களிடம் கிடையாது. அதிமுக-வை இரண்டாக பிளந்து அதுல ஒரு குரூப் வச்சு நீங்க ஆட்சி அமைக்க போறீங்க. இந்த கருமத்தை பார்க்க நாங்க உள்ள இருக்க மாட்டோம், வெளிநடப்பு செய்றோம்” னு வந்துட்டோம்.

“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெட்டி கொடுத்து தூக்குறாங்க. திமுக எம்.எல்.ஏ-வை பார்த்தா கேஸ் போடுறது, அதிமுக எம்.எல்.ஏ-வை பார்த்தா பெட்டி கொடுத்து வாங்குறது. Whole sale-ஆ எம்.எல்.ஏ-வையே தூக்குறது, கட்சிய உடைக்கிறது தான் தவெக ஆட்சியோட வேலை.

சட்டமன்றத்தில, சட்டமன்ற உறுப்பினர்கள் அவங்க தொகுதி பிரச்சனையை பத்தி பேசுவாங்க, “எங்க தொகுதியில ரோடு இல்ல, தண்ணி வரல, சாக்கடை பிரச்சனை, சமுதாய நலக்கூடம் கட்டி கொடுங்க, பிளே கிரவுண்ட் அமைச்சுக் கொடுங்க, ஸ்கூல் கட்டி கொடுங்க” ன்னு கேப்பாங்க. திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை பேசுறோம், கேள்வி கேட்கிறோம்.

“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!

ஆனா, இதற்கு முதலமைச்சர் விஜய் வாயை திறந்து பதில் பேசுனதா சரித்திரமே கிடையாது! சட்டசபையில கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க, பாட்டு பாடுறாங்க. அமைச்சர் பாட்டு பாடுறாரு, சட்டமன்ற உறுப்பினர்கள் பாட்டு பாடுறாங்க. சபாநாயகர் பாட்டு பாடுறாரு! நான் சட்டமன்றத்திலயே கேட்டேன் — ”சபாநாயகர் அவர்களே, எங்களுக்கு சந்தேகமா இருக்கு... நாங்க சட்டமன்றத்துக்கு வந்திருக்கோமா இல்லை 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு வந்திருக்கோமா?” ன்னு கேட்டேன்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த 4 மாதத்தில் 500 படுகொ*கள் நடந்துள்ளது. கோவையில் கடந்த மாதத்தில் மட்டும் 10 படுகொ*கள், மதுரையில் கடந்த வாரம் மட்டும் 8 படுகொ*கள் நடந்துள்ளது.

வண்டலூர் அருகே நேற்று (செப்.25) பள்ளி மாணவி ஒருவர் பள்ளிக்குள்ளேயே பா*யல் வன்கொ*மைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். நீதி கேட்டுப் போராடிய மக்களிடம் முதலமைச்சர் அந்த வழியே வருகிறார் என, இந்தப் பிரச்சனையை பாம்புக் கடி எனச் சொல்லி திசை திருப்பப் பார்த்தது தவெக அரசின் காவல்துறை.

முதலமைச்சர் விஜய் பதவியேற்கும்போது திமுக கஜானாவைக் காலி செய்துவிட்டதாக கூறினார். தற்போது ஜோசியக்காரர் பேச்சைக் கேட்டு கடலைப் பார்த்து (Beach Facing) அமரும் வகையில் ரூ.1,200 கோடியில் புது சட்டமன்றம் கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!

மதுராந்தகத்தில் நேற்று (செப்.25) முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். 30 நிமிஷம் பேசி இருக்காரு, அந்த 30 நிமிஷத்துல 32 முறை “திமுக, திமுக, திமுக” ன்னு சொல்லியிருக்காரு! நாங்க கூட அவ்வளவு திமுக பத்தி பேச மாட்டோம், அந்த அளவுக்கு நம்ம மேல பயம்!

தவெக என்னென்ன வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தாருன்னு உங்களுக்கு தெரியும். ஏதாவது ஒன்னு செஞ்சாரா? மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 உயர்த்தி கொடுப்பேன்னு சொன்னாரு, கொடுத்தாரா? இல்லை. வருஷத்துக்கு 6 கேஸ் சிலிண்டர் தருவோம்னு சொன்னாரு, ஆட்சிக்கு வந்த உடனே கொடுத்தாரா? இல்லை.

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாசா மாசம் ரூ.4,500 ஊக்கத்தொகை தர்றேன்னாரு, கொடுத்தாரா? அதைப்பற்றி பேச்சே கிடையாது.

விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி பண்றேன்னாரு, பண்ணாரா? இல்லை.

இன்னைக்கு இந்த ஆட்சியோட சாதனை என்ன தெரியுமா? ரெண்டே ரெண்டு விஷயத்துலதான் போட்டி — ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அருவா வெட்டு! எங்க பார்த்தாலும் கரண்ட் கட்! முதலமைச்சர் தொகுதியிலயே கரண்ட் கிடையாது, அமைச்சர்கள் பங்கேற்கிற நிகழ்ச்சியிலயே கரண்ட் கிடையாது!

போன தேர்தல்ல செஞ்ச தவறை தயவு செஞ்சு இந்த முறை செஞ்சிடாதீங்க.

தேர்தல் நாள்: வர்ற 6-ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை: 9-ஆம் தேதி. சின்னம் & வரிசை: வாக்குப்பெட்டியில நம்முடைய வெற்றி வேட்பாளர் சகோதரி சுகன்யாவுடைய பெயர் 3-வது இடத்தில் இருக்கும்.

இன்னும் 9 நாட்கள் இருக்கு. நீங்க அத்தனை பேரும் முடிவு பண்ணிட்டீங்க. இந்த இடைத்தேர்தல்ல இந்த ஆளுங்கட்சிக்கு ஒரு சரியான பாடத்தை புகட்டணும்னு!

“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!

அடுத்த 9 நாட்கள் இந்த பிரச்சாரத்தை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வீடா போய், ஒவ்வொரு வாக்காளரா சந்திச்சு, உங்க குடும்பத்துல இருக்கவங்ககிட்ட, நண்பர்கள்கிட்ட கொண்டு போய் சேருங்க. ஏன் உதயசூரியன் சின்னத்தில வாக்களிக்கணும், ஏன் சகோதரி சுகன்யாவை ஜெயிக்க வைக்கணும்னு எடுத்துச் சொல்லி, அவங்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சு சட்டமன்றத்துக்கு அனுப்புங்க.

உங்களை எல்லாம் அன்போடு கேட்கிறேன், பண்போடு கேட்கிறேன், பாசத்தோடு கேட்கிறேன், உரிமையோடு கேட்கிறேன்... உங்க வீட்டு பிள்ளையாக இருந்து கேட்கிறேன், தலைவருடைய மகனாக இருந்து கேட்கிறேன், இன்னும் பெருமையா பூரிப்பா சொல்லணும்னா டாக்டர் கலைஞருடைய பேரனாக வந்து கேட்கிறேன் — உதயசூரியன் சின்னத்தில சகோதரி சுகன்யாவுக்கு வாக்களிச்சு மிகப்பெரிய வெற்றியை தேடி தாருங்க, எனக் கூறி வாக்குகளை சேகரித்தார்.

banner

Related Stories

Related Stories