இந்தியா

காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த Wedding Gift: ஹோம் தியேட்டரை Play செய்தபோது மணமகனுக்கு நடந்த விபரீதம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணத்திற்குப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் திடீரென வெடித்த விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த Wedding Gift: ஹோம் தியேட்டரை Play செய்தபோது மணமகனுக்கு நடந்த விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலம், சமரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி. இளைஞரான இவருக்கு மார்ச் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது புது தம்பதிகளுக்குப் பலரும் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்த பிறகு தங்களுக்கு வந்த பரிசுப் பொருட்களைப் புதுமாப்பிள்ளையும் அவரது உறவினர்களும் வீட்டில் வைத்துப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பெரிய பரிசுப் பொருளில் ஹோம் தியேட்டர் இருந்துள்ளது. இதைப்பார்த்து அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். உடனே அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு ஹோம் தியேட்டரில் பாடல் கேட்க முடிவெடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மின்சார போர்டில் வயரை இணைத்து விட்டு ஹோம் தியேட்டரை இயக்கி உள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்துள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த Wedding Gift: ஹோம் தியேட்டரை Play செய்தபோது மணமகனுக்கு நடந்த விபரீதம்!

இந்த இடிபாட்டில் வீட்டின் உள் இருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவர்களை மீட்க முயன்றனர். அப்போது புதுமாப்பிள்ளை ஹேமேந்திரா மேராவி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து மாப்பிள்ளையின் சகோதரர் ராஜ்குமார் மற்றும் ஒருவயது சிறுவன் உட்பட 4 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அங்குச் சகோதரர் ராஜ்குமார் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஹோம் தியேட்டரில் வெடி மருந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பரிசு பொருளை யார் கொடுத்தது என விசாரணை நடத்தினர்.

காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த Wedding Gift: ஹோம் தியேட்டரை Play செய்தபோது மணமகனுக்கு நடந்த விபரீதம்!

இதில் சர்ஜூ என்ற இளைஞர்தான் ஹோம் தியேட்டரை பரிசாக வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

சர்ஜூ தான் காதலித்த பெண்ணுக்குத் திருமணம் நடந்ததால் அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஹோம் தியேட்டரில் வெடிமருந்தை வைத்து வெடிக்கும்படி செய்தது விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலிஸார் அந்த வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories