இந்தியா

வேலை தேடும் வலைதளம் மூலம் பெண்களுக்கு ஆபாச வீடியோ.. அதிரடியாக கைது செய்யப்பட்ட Flipkart டெலிவரி பாய் !

40 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக மும்பையில் flipkart டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை தேடும் வலைதளம் மூலம் பெண்களுக்கு ஆபாச வீடியோ.. அதிரடியாக கைது செய்யப்பட்ட Flipkart டெலிவரி பாய் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக அநேகமான இளைஞர்கள் இணையதளம் வாயிலாக வேளைக்கு அப்ளை செய்து வருகின்றனர். அதிலும் பெண்களும் இதில் ஏராளமாக அப்ளை செய்கின்றனர். அப்படி பட்டவர்களை குறிவைத்து இளைஞர் ஒருவர் ஆபாசமாக பேசி வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச வீடியோ அனுப்புவதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது மும்பையை சேர்ந்த மன்சூலே என்று தெரியவந்தது. மேலும் 27 வயதுடைய இந்த இளைஞர் Flipkart டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வேலை தேடும் வலைதளம் மூலம் பெண்களுக்கு ஆபாச வீடியோ.. அதிரடியாக கைது செய்யப்பட்ட Flipkart டெலிவரி பாய் !

இதைத்தொடர்ந்து அவரை விரைந்து கைது செய்த அதிகாரிகள் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது, மன்சூலேவின் பெற்றோர் இவரது சிறுவயதிலேயே இறந்து விட்டனர். இதனால் இவர் தனது பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

பின்னர் தனது சகோதரர்களுடன் புனேவில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து தற்போது பகுதி நேர வேலையாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி பாயாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் ஆர்வம்காட்டும் இவர், பெண்களை குறிவைத்து பல்வேறு காரியங்களை செய்து வந்துள்ளார்.

வேலை தேடும் வலைதளம் மூலம் பெண்களுக்கு ஆபாச வீடியோ.. அதிரடியாக கைது செய்யப்பட்ட Flipkart டெலிவரி பாய் !

குறிப்பாக முகநூல் பக்கத்தில் உள்ள வேலை தேடும் குரூப்பில் இணைந்து, வேலை தேடும் பெண்களின் சமூக வலைதள கணக்குகளை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அந்த குழுக்களில் இருக்கும் பெண்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களை தொடர்பு கொண்டுள்ளார். அதோடு அவர்களுடன் வேலை குறித்து பேசுவதாக கூறி தனது பேச்சுக்களை தொடர்ந்து பின்னர் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதில் சிலரது வாட்சப் எண்களை பெற்று அதிலும் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். மேலும் அவர்களிடம் அவதூறாக பேசி, ஆபாச வீடியோக்களும் அனுப்பி வந்துள்ளார். அதோடு சிலரிடம் வீடியோ கால் மூலமும் பேசி வந்துள்ளார். இவ்வாறு கால் பேசும்போது, சில பெண்கள் காலை கட் செய்தால், அவர்களிடம் மிரட்டியும் வந்துள்ளார்.

வேலை தேடும் வலைதளம் மூலம் பெண்களுக்கு ஆபாச வீடியோ.. அதிரடியாக கைது செய்யப்பட்ட Flipkart டெலிவரி பாய் !

அதோடு இதனால் தான் ஒரு வித சந்தோசத்தை அனுபவித்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இவரது செல்போனை பறிமுதல் செய்த காவல்துறை, அதில் இவர் சுமார் 40 பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலை தேடும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி, அதில் மகிழ்ச்சி கண்ட மும்பையில் flipkart டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories