இந்தியா

புது துணி வாங்கித்தராத விரக்தியில் வெளியே சென்ற சிறுமிக்கு வன்கொடுமை; பிறந்தநாளன்று நிகழ்ந்த கொடூரம்!

அந்தி சாய்ந்ததும், சிறுமியை அந்த கும்பல் தனிமடகு கிராமத்திற்கு தனியார் பேருந்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

புது துணி வாங்கித்தராத விரக்தியில் வெளியே சென்ற சிறுமிக்கு வன்கொடுமை; பிறந்தநாளன்று நிகழ்ந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிறந்த நாளுக்கு பெற்றோரு புதிய துணி வாங்கித்தராததால் கோபித்துக்கொண்டே வெளியே சென்ற 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு கர்நாடகாவில் நடந்திருக்கிறது.

இந்த கொடூர சம்பவம் கோலார் மாவட்டத்தில் உள்ள காமசமுத்ரா காவல் நிலையக் கட்டுப்பாட்டில் நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்பாக ஆனந்த் குமார், கந்தராஜு, பிரவீன், வேனு ஆகிய நால்வரை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த வெள்ளியன்று (பிப்.,18) பாதிக்கப்பட்ட 9ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி தனது பிறந்த நாளுக்காக பெற்றோர் புது துணி மற்றும் சாக்லேட்டுகள் எதுவும் வாங்கித் தராததால் கோபித்துக் கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் பங்காரப்பேட்டைக்கு பேருந்தில் சென்றிருக்கிறார்.

சிறுமி தனியாக இருப்பதை கண்ட மேற்குறிப்பிட்ட நால்வர், அவரிடம் பேச முயற்சித்ததோடு அருகே இருக்கும் பூங்காவுக்கு அழைத்துச் சென்று பொழுதை கழித்திருக்கிறார்கள்.

அந்தி சாய்ந்ததும், சிறுமியை அந்த கும்பல் தனிமடகு கிராமத்திற்கு தனியார் பேருந்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனிடையே மது அருந்தியிருந்த அந்த கயவர்கள், சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

இதனால் அலறிய சிறுமியின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்திருக்கிறார்கள். பின்னர் சிறுமியை வன்கொடுமை செய்த அந்த நால்வரையும் கைது செய்த போலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து கைதான அந்த காமூகர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories