
இந்தியா என்கிற மக்களாட்சி நாட்டின் எதிர்காலம் என அடையாளப்படும் இளைஞர்களும், மாணவர்களும் தங்களது உரிமைகளைக் கோரி, அடக்குமுறைகளுக்கு எதிராக அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிமைப் போராட்டங்களுக்கே உரித்தான தமிழ்நாட்டின் அரசு இதுவரை வாய் திறந்ததாக இல்லை.
குறிப்பாக, மக்களிடையே மாற்றத்தை உண்டாக்குகிறோம் என்று சொன்னதற்கு செயல் வடிவம் தருவதுபோல, போராட்ட உணர்வு கொண்ட தமிழ்நாட்டை ‘வாயை மூடி’ பேச வைத்து வருகிறார் இன்றைய முதலமைச்சர் விஜய்.
அநீதிக்கு எதிரான அறப் போராட்டத்திற்கு வலு சேர்க்க இயலாக தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள், திரைப்படத்திற்கான விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்சியாளர்கள் அறப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவில்லை என்றால் என்ன... நாங்கள் செய்கிறோம் என செயல்பட்ட மாணவர் அமைப்பினரை ஊக்கப்படுத்தவாவது செய்ததா அரசு என்றால், இல்லை! மாற்றாக இழுத்துச் சென்று கைது செய்தது. இதுதான், இன்றைய தமிழ்நாட்டின் அவல நிலையாக இருந்து வருகிறது.

இதனைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் சோபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, சோபா மாடல் அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.”






