தமிழ்நாடு

வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்து சிகிச்சை பெற்ற காணொளி வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக வந்தவர்கள் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்துக்கொண்டு சிகிச்சை பெறும் அவலம் த.வெ.க. ஆட்சியில் அரங்கேறியுள்ளது, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்லும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை - சேலம் - திருச்சி - மதுரை ஆகிய மையப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் விபத்து ஏற்பட்டால் முதல்கட்ட சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இதனால் எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், நேற்று (செப்.05) மாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அப்போது போதிய குளுக்கோஸ் ஸ்டாண்ட் இல்லாததால், நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை கையில் தூக்கிப்பிடித்தபடி படுத்திருந்தனர். சிலருக்கு உடன் வந்த உதவியாளர்கள் பாட்டிலை பிடித்துக் கொண்டிருந்தனர்.

வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இத்தகைய அடிப்படை வசதியை கூட பராமரிக்காமல், மருத்துவப் பயனாளிகள் கையில் குளுக்கோஸ் பாட்டிலை பிடித்துக்கொண்டு சிகிச்சை பெறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் அரசு மருத்துவமனையை நாடிவரும் ஏழை எளிய மக்களுக்கு மேலும் அச்சத்தை உண்டாக்குமே தவிர நம்பிக்கையை ஏற்படுத்தாதுஎன சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தவெக அரசு அமைந்ததில் இருந்தே மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துவதில்லை எனவும், குடிநீர், சுகாதாரம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் தொடர் அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

banner

Related Stories

Related Stories