தமிழ்நாடு

“நிர்வாண படங்களை வெளியிட்டு விடுவேன் என செவிலியருக்கு மிரட்டல்” : வாலிபரை வலைவீசி தேடும் போலிஸ்!

செவிலியரை பாலியல் வல்லுறவு செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியவரை போலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

“நிர்வாண படங்களை வெளியிட்டு விடுவேன் என செவிலியருக்கு மிரட்டல்” : வாலிபரை வலைவீசி தேடும் போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

செவிலியரை பாலியல் வல்லுறவு செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியவரை போலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியை அடுத்த பாகூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவரும், மணமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (27), என்பவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சந்தோஷ் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உறவு வைத்துள்ளார். பின் அதிக வரதட்சணை எதிர்பார்த்து, திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.

இந்நிலையில், வேறு ஒருவருடன் அப்பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்த போது, சந்தோஷ் தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி அதையும் நிறுத்தியுள்ளார்.ஆனால் அதன்பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்., 15ஆம் தேதி, அப்பெண்ணை சந்தோஷ் உறவு கொள்ள அழைத்துள்ளார். அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த சந்தோஷ், நிர்வாண படங்களை வலைதளங்களில் வெளியிடுவதாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

மனமுடைந்த அப்பெண் துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினர்.

பின்னர், கரையாம்புத்துார் புறக்காவல் நிலையத்தில் சந்தோஷ் மீது அப்பெண் புகார் அளித்தார். பாலியல் பலாத்காரம், நிர்வாண படம் எடுத்து மிரட்டல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சந்தோஷ் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories