இந்தியா

மனைவியுடனான வல்லுறவு: ”எல்லா திருமணங்களும் வன்முறை என கண்டிக்க முடியாது” - ஸ்மிரிதி இரானி பரபரப்பு பதில்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பினாய் விஸ்வம் கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் ஸ்மிரிதி இரானி பதிலளித்திருந்தார்.

மனைவியுடனான வல்லுறவு: ”எல்லா திருமணங்களும் வன்முறை என கண்டிக்க முடியாது” - ஸ்மிரிதி இரானி பரபரப்பு பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், திருமண உறவே என்றாலும் கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபடச் செய்வது குற்றச்செயலாக கருதப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், ஒரு ஆண் மற்றும் பெண் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஹரி ஷங்கர், நீதிபதி ஹரி ஷங்கர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்த விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பினாய் விஸ்வம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக பேசிய ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் எனக் கூறுவது நல்லதல்ல. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் இப்போதைக்கு விவாதிக்க மாநிலங்களவை விதி அனுமதிக்காது.

பெண்களையும், குழந்தைகளையும் காப்பது அனைவரின் முன்னுரிமையாகும். எல்லா திருமணத்தையும் வன்முறையின் கீழ் நடப்பதாக கருதத் தேவையில்லை என ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories