இந்தியா

’பாஜக ஆட்சியால் எங்கள் வாழ்க்கைத் தரமே மோசமாகிவிட்டது’ சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் மக்கள் குற்றச்சாட்டு

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

’பாஜக ஆட்சியால் எங்கள் வாழ்க்கைத் தரமே மோசமாகிவிட்டது’ சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் மக்கள் குற்றச்சாட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மோசம் அடைந்துள்ளதாக சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து நாடு தழுவிய கருத்துக் கணிப்பை சி-வோட்டர் நிறுவனம் மேற்கொண்டது.

அதன்படி மூவாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், 62.4 சதவிகிதம் பேர், பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் இதனால், விலைவாசி உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும், பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ஒன்றிய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் படுமோசம் என 38 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓர் ஆண்டில் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய கேள்விக்கு 42.4 சதவிகிதம் பேர் மோசம் என்று கூறியுள்ளனர்.

நன்றி - முரசொலி நாளேடு

banner

Related Stories

Related Stories