இந்தியா

15 நொடியில் 8 முறை கத்திக்குத்து; பள்ளி மாணவியை கொடூரமாக தாக்கிய இளைஞன்.. கதிகலங்க செய்யும் CCTV காட்சி!

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபரை திட்டியதன் காரணமாக எட்டாம் வகுப்பு மாணவியை 8 முறை கத்தியால் குத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

15 நொடியில் 8 முறை கத்திக்குத்து; பள்ளி மாணவியை கொடூரமாக தாக்கிய இளைஞன்.. கதிகலங்க செய்யும் CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மஞ்சகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் பொதுவெளியில் இழுத்து பிடித்து கத்தியால் குத்தி தாக்கும் கொடூரமான வீடியோ வெளியாகியுள்ளது.

பிரதாப்புர் கிராமத்தில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பள்ளிக்கு வரும் போதும் வீடு திரும்பும் போதும் தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டிருக்கிறார் அதே கிராமத்தைச் சேர்ந்த குட்டா (gudda) என்ற நபர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்றும் குட்டா அச்சிறுமியை தொந்தரவு செய்திருக்கிறார். அப்போது தடுத்த சிறுமியை ஆத்திரத்தில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து வெறும் 15 விநாடியில் 8 முறை குத்தியிருக்கிறார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து அந்த கொலையாளியை மடக்கிப் பிடித்தனர். கூட்டம் கூடியதும் குட்டாவுடன் வந்த நபர் தப்பித்திருக்கிறார். ஆனால் ஒருவழியாக குட்டாவும் மக்களின் பிடியில் இருந்து தப்பித்து ஓடியிருக்கிறார்.

கத்திக்குத்துக்கு ஆளான சிறுமியை அருகே உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குட்டாவை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த வெறிச்செயல் குறித்த சிசிடிவி காட்சி காண்போரை கதிகலங்க வைத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories