இந்தியா

மனைவியின் செல்லப்பெயரை நாய்க்கு வைத்ததால் ஆத்திரம்; பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொடூரம்!

மனைவியின் செல்லப் பெயரை வளர்ப்பு நாய்க்கு வைத்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த நபருக்கு போலிஸ் வலை வீசியுள்ளது.

மனைவியின் செல்லப்பெயரை நாய்க்கு வைத்ததால் ஆத்திரம்; பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத்தின் பாவ்நகரில் வசித்து வந்தவர் நீட்டாபென் சார்வியா (35). இந்த பெண்ணுக்கும் அண்டை வீட்டில் இருக்கும் சுராபாய் பார்வத்துக்கும் அடிக்கடி சண்டை வருவது வாடிக்கை. பின்னர் இரு வீட்டாரும் சமாதானமாகிக் கொள்வார்களாம்.

இப்படி இருக்கையில் நீட்டாபென் தனது புதிய வளர்ப்பு நாய்க்கு சோனு என பெயர் சூட்டியுள்ளார். அதற்கு சுராபாய் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் சுராபாய் தனது மனைவியை சோனு என்று அழைப்பதால் நாய்க்கு வேறு பெயரை வைக்குமாறு கூறியிருக்கிறார்.

இதனை பொருட்படுத்தாத நீட்டாபென் அவரது நாய்க்குட்டியை சோனு என்றே தொடர்ந்து அழைத்து வந்திருக்கிறார். இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு ஆளான சுராபாய், நீட்டாபென்னின் கணவரும் குழந்தைகளும் இல்லாத சமயம் பார்த்து பெண்ணின் வீட்டுக்குள் சில ஆட்களுடன் நுழைந்து நாயின் பெயரை மாற்றச் சொல்லி வற்புறுத்தியிருக்கிரார்.

வாக்குவாதம் முற்றியதை அடுத்து சுராபாய் நீட்டாபென்னின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்திருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்திருக்கின்றனர்.

அந்த சமயத்தில் நீட்டாவின் கணவரும் குழந்தைகளும் வந்திருக்கிறார்கள். உடனடியாக நீட்டாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சுராபாய், அவரது சகாக்கள் 6 பேர் மீது கொலை முயற்சி, பெண்ணிடம் அத்துமீறுவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக எவரையும் பாவ்நகர் போலிஸார் கைது செய்யவில்லை. பெண்ணின் மீது தீவைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories