இந்தியா

ஜீப்பில் கிக் ஸ்டார்ட்டா? - பட்டறை தொழிலாளியின் கண்டுபிடிப்பால் அசந்து போன ஆனந்த் மஹிந்திரா!

பழைய உதிரி பாகங்களை வைத்து புதிய வகையில் வெறும் 60 ஆயிரம் ரூபாயில் ஜீப் ஒன்றை உருவாக்கிய பட்டறைத் தொழிலாளியை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.

ஜீப்பில் கிக் ஸ்டார்ட்டா? - பட்டறை தொழிலாளியின் கண்டுபிடிப்பால் அசந்து போன ஆனந்த் மஹிந்திரா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிராவின் தேவராஷ்டிரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தத்தாத்ரய லோஹர். பட்டறையில் கொல்லராக இருக்கும் இவர் மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பழைய உதிரி பாகங்களை

கொண்டு ஜீப் ஒன்றினை உருவாக்கியுள்ளார். அந்த ஜீப்பின் சிறப்பம்சம் என்னவெனில், இரு சக்கர வாகனங்களில் இருப்பது போன்று கிக் ஸ்டார்ட் என்ற அம்சத்தை பொருத்தியிருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் வெறும் 60,000 ரூபாய்க்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அதனை பகிர்ந்ததோடு வில்லேஜ் விஞ்ஞானியான தத்தாத்ரய லோஹரை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், திறன் மிகுந்தவர்களின் படைப்பை பாராட்டுவதில் ஒருபோதும் தவறியதில்லை எனக் குறிப்பிட்டதோடு மற்றொரு ட்வீட்டில், லோஹர் தயாரித்துள்ள வாகனம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் சாலையில் இயக்கப்படுவதை உள்ளூர் அதிகாரிகள் நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே லோஹரின் புதுமையான கண்டுபிடிப்புக்கு வெகுமதியாக மஹிந்திரா நிறுவனத்தின் பொலேரோ காரை வழங்கி அவரது புதுமையான ஜீப்பை பெற்று அதனை மஹிந்திரா ரிசர்ச் வேலியில் வைத்து காட்சிக்கு வைக்கப்படும் எனவும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். வெறும் 45 விநாடிகளே இருக்கக் கூடிய அந்த ஜீப் வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகியதோடு லோஹரின் கண்டுபிடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories