அரசியல்

‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!

திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்.

‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தேசிய அளவில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. செலவுகள் குறைந்து, பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல்வேறு மாநில அரசுகளாலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

2026 நிதியாண்டில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் மாதாந்திர அல்லது வருடாந்திரப் பணப் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!

இவற்றின் மொத்தச் செலவு ஆண்டுக்கு 1.7 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 12 கோடிப் பெண் பயனாளிகளின் வங்கி கணக்கில் இவை சென்றடைகின்றன.

இந்த திட்டம் தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு ஆய்வு நடத்தியது.

அதில் மகளிர் உரிமைத்தொகை மூலம் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதோடு, அவர்களின் செலவுகளை குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் நல்ல வளர்ச்சி இருப்பதால், இந்த திட்டத்தில் மாற்றம் அவசியம் என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

    banner

    Related Stories

    Related Stories