இந்தியா

"மாநில அரசுக்கே தடுப்பூசி கிடக்காதபோது தனியார் கம்பெனிகளுக்கு எப்படி கிடைக்கிறது?" : ப.சிதம்பரம் கேள்வி!

தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு கிடைக்கவில்லை ஆனால் தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

"மாநில அரசுக்கே தடுப்பூசி  கிடக்காதபோது தனியார் கம்பெனிகளுக்கு எப்படி கிடைக்கிறது?" : ப.சிதம்பரம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தடுப்பூசி திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாததால், தற்போது இந்தியா முழுவதுமே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை விடுத்திருந்தாலும், இன்னும் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து முறையான பதில்கள் வராததால், தடுப்பூசி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் முதல் கொரேனா தடுப்பு நடவடிக்கை வரை தொடர்ச்சியாக ஒன்றிய அரசை விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி, தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு கிடைக்காதபோது தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "மாநில அரசுகளின் தடுப்பூசி டெண்டர்களுக்கு உற்பத்தியாளர்கள் கைவிரிக்கின்றனர். தனியார் கம்பெனிகள் நாங்கள் தடுப்பூசிகளைப் பெற்று எங்கள் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்போகிறோம் என்கிறார்கள். மகிழ்ச்சி, பாராட்டுகள் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் தனியார் கம்பெனிகளுக்குக் கிடைக்கிறது. அது எப்படி?'' என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் லட்சத்தீவு பிரச்சனை குறித்து ஒன்றிய அரசை விமர்சனம் செய்து மற்றொரு ட்விட்டர் பதிவில், "லட்சத்தீகளில் புதிய விதிகளை திணிக்கும் முயற்சியை நியாயப்படுத்தி அந்தத தீவுகளின் ஆட்சித் தலைவர் (Collector) அளித்த பேட்டி அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சித் தலைவர் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்.

மத்திய அரசு நியமித்த நிர்வாகியை (administrator) உடனடியாக நீக்கவேண்டும். அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆட்சித் தலைவரை உடனடியாகப் பணிமாற்றம் செய்யவேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories