இந்தியா

கொரோனா 2வது அலையில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா 2வது அலையில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா 2வது அலையில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா இரண்டாவது அலை நாடுமுழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று நோய் பல குடும்பங்களை புரட்டிபோட்டுள்ளது. தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டும், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்), தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய இலவச தொலைபேசி ஆலோசனை மையத்திற்கு கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளனர்.

அதேபோல், கடந்த வாரம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு ஒரு வாரத்தில் 81 அழைப்புகள் வந்துள்ளது. அதில் அறுபதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் கொரோனாவால் தனது பெற்றோர்களை இழந்த குழந்தைகளிடமிருந்து வந்துள்ளது.

அது மட்டுமல்லாமல், ஒரு ஆய்வு அறிக்கையில் வெளியான தகவலின் படி, கொரோனா இரண்டாவது அலையில் மட்டும், 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்த பலரின் உறவினர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories