இந்தியா

புதிய நாடாளுமன்றம் கட்ட இடைக்கால தடை: வழக்கு நிலுவையில் இருக்கையில் அடிக்கல் நாட்டுவதா? - சுப்ரீம் கோர்ட்

புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்ட இடைக்கால தடை: வழக்கு நிலுவையில் இருக்கையில் அடிக்கல் நாட்டுவதா? - சுப்ரீம் கோர்ட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டிசம்பர் 10ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரூ.20 ஆயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு தடைகோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வரும் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடுகள் செய்திருக்கிறது. இதனிடையே வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு நிலுவையில் உள்ள போது எப்படி மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது..? கட்டடம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க வில்லை என்றால் அதற்கு பொருள் அனுமதி வழங்கிவிட்டோம் என்பது அல்ல.

வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபடுகிறது என்று நீதிபதி கண்வீல்கர் தலைமையிலான அமர்வு சரமாரியாக கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து சிறிது நேரம் அவகாசம் கோரிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அரசுடன் ஆலோசித்து விட்டு மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தார்.

அப்போது அடிக்கல் நாட்டு விழாவிற்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். அதேநேரத்தில் கட்டிடம் எதுவும் கட்டுப்படாது என்று உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து 10 ஆம் தேதி அன்று பிரதமர் அடிக்கல் நாட்டுவதற்கு மட்டும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கும், அங்கு இருக்கக்கூடிய பழைய கட்டடங்களை இடிப்பதற்கும், மரங்களை அகற்றுவதற்கும் இடைக்கால தடை விதித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories