இந்தியா

வடமாநில கட்டட பணியாளர்களுக்கு நிகராக தமிழக இளைஞர்களை முன்னேற்றுவோம் -NEP பற்றி KT ராகவனின் அருமையான பதில்

வட மாநில தொழிலாளர்களை போன்று தமிழர்களையும் கூலி வேலைக்கு செல்லும் வகையில் முன்னேற்றுவது தான் புதிய கல்விக் கொள்கையின் சாராம்சம்.

வடமாநில கட்டட பணியாளர்களுக்கு நிகராக தமிழக இளைஞர்களை முன்னேற்றுவோம் -NEP பற்றி KT ராகவனின் அருமையான பதில்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க தலைமையில் மத்தியில் ஆட்சியமைத்ததில் இருந்து நாட்டு மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களையும், மதச்சார்பற்ற நாடாக உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றக் கூடியதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக காஷ்மீரை பிரித்து அதற்கான சட்டப்பிரிவுகளை ரத்து செய்தது, சிறுபான்மையினர்களை ஒழிக்கும் விதமாக சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்தது முதற்கொண்டு தற்போது புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கப் பார்ப்பது என பல்வேறு சதிச் செயல்களில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

இது போன்ற திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், சமூக நல ஆர்வலர்கள் என பல தரப்பினர் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

வடமாநில கட்டட பணியாளர்களுக்கு நிகராக தமிழக இளைஞர்களை முன்னேற்றுவோம் -NEP பற்றி KT ராகவனின் அருமையான பதில்

ஆனால் பா.ஜ.கவினரோ எதிர்ப்புகளை கருத்தால் வெல்ல முடியாமல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து அவமதித்து அவர்கள் குறித்து அவதூறுகளை பரப்பி நாலாந்தர அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில், தனியார் தொலைக்காட்சியில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடந்த விவாத நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த கே.டி.ராகவன் பேசியுள்ளது சமூக வலைதள வாசிகளிடையே நகைப்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. அதில், தமிழ்நாட்டில் சாதாரண கூலி வேலை செய்வதற்கு கூட வெளி மாநிலங்களில் இருந்துதான் ஆட்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

அதற்காகவே புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வித்துறையை மேம்படுத்த பா.ஜ.க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனக் கூறியிருக்கிறார். உண்மையில், வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பிழைப்புத் தேடி வருவோரின் எண்ணிக்கை குஜராத் மாடலாக இருக்கக் கூடிய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வந்த பிறகே அதிகரித்துள்ளது. ஆகவே திராவிட வழியில் செயல்படும் தமிழகம் எப்போதும் சிறுமைப்பட்டு போவதில்லை என கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக தென் மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் மக்கள் வருவதை போலவே, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஏற்படுத்திய அருமையான கல்வித்திட்டத்தின் மூலம் பயின்று சுயமரியாதையுடன் பணியாற்றி வரும் தமிழர்களையும் கூலி வேலை செய்யவதற்கான உத்தியாகவே புதிய கல்விக் கொள்கை என்ற நாசகர திட்டத்தை மத்திய மோடி அரசு கொண்டு வர முயற்சிக்கிறது என்ற உண்மையை பா.ஜ.கவைச் சேர்ந்த கே.டி.ராகவனே வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories