
ஒன்றிய பா.ஜ.க அரசின் நிதிநிலை அறிக்கையில் ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கையில் 2.78 லட்சம் கோடி ரயில்வே முதலீட்டுக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் இல்லாத வகையில் 12000 கோடி திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 36 ஆயிரத்து 721 கோடி புதிய பாதை திட்டங்களுக்கும் 37 ஆயிரத்து 750 கோடி இரட்டை பாதை திட்டங்களுக்கும் ரயில் வண்டிகளை வாங்க65 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 700 கிலோமீட்டர் புதிய ரயில் பாதை திட்டங்களும் 2600 கிலோமீட்டர் இரட்டை பாதை திட்டங்களும் முடிக்கப்பட்டதாகவும் வரும் நிதியாண்டில் 500 கிலோமீட்டர் புதிய பாதை திட்டங்களும் 2400 கிலோமீட்டர் இரட்டை பாதை திட்டங்களும் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஒன்று மில்லை.
ஏழு உயர் வேக ரயில் மண்டலம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதில் அனைத்தும் ஹைதராபாதையும் டெல்லி வாரணாசியையும் சுற்றியும் வரக்கூடியதாக அவை உள்ளன. அதாவது சந்திரபாபு நாயுடுவையும் பிரதமர் தொகுதியையும் குறி வைத்து இவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெங்களூருக்கும் சென்னைக்கும் ஹைதராபாதிற்கும் சென்னைக்கும் என்று இரு காரிடார்கள் ஹைதராபாத் தையும் பெங்களூரையும் குறி வைத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல தனி சரக்கு பாதை ஒன்று கிழக்கே தான்குனியையும் மேற்கே சூரத்தையும் இணைத்து அமைக்கப்படுமாம். இந்த இரண்டு திட்டங்களும் சுற்றுச்சூழல் அடிப்படையில் தாக்குப் பிடிக்கும் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணி போக்குவரத்து திட்டங்கள் ஆகும். இதைத் தவிர நிதிநிலை அறிக்கையில் ரயில்வே குறித்து வேறு எதுவும் கிடையாது.
ஆனால் பொருளாதார ஆய்வு அறிக்கையில் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதம மந்திரி கதிசக்தி பொருளாதார ரயில் மண்டலங்கள் அமைக்கப்படும். மூன்று மண்டலங்கள் ஆகும் அவை. எரிசக்தி தாது பொருள் சிமெண்ட் ஆகியவற்றுக்கான ஒரு மண்டலம்; துறைமுக இணைப்பு இன்னொரு மண்டலம்;அதிக பயணி போக்குவரத்து உள்ள ரயில் பாதைகள் என்ற மூன்று ரயில் மண்டலங்கள் உருவாக்கப்படுமாம். 11.17 லட்சம் கோடியில் 434 திட்டங்கள் பிரதமர் கதிசக்தி திட்டத்தில் உள்ளன என்றும் அவற்றில் 122 திட்டங்கள் 1450 கிலோ மீட்டருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் 198 திட்டங்கள் 1977 கிலோ மீட்டருக்கு அனுமதிப்பது என்பது பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. இவற்றுள் ஏதாவது தென்னிந்தியாவுக்கும் தமிழகம் கேரளாவுக்கும் உள்ளதா என்றால் ஒன்றும் கிடையாது. அது மட்டுமல்ல. தனியார் பங்களிப்புடன் 16 ஆயிரத்து 631 கோடியில் 18 திட்டங்கள் முடிவடைந்துவிட்டனவாம். ஏழு திட்டங்கள் 16 ஆயிரத்த3 34 கோடியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது .
இந்த பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தில் ஒன்று கூட தமிழகத்திற்கோ கேரளத்திற்கும் கிடையாது. இதைப்பற்றி எந்த பேச்சும் கிடையாது.
தமிழகத்துக்கு கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் புறக்கணித்தது மட்டுமல்ல பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் வட இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் போது தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தில் 894 கிலோ மீட்டர் தூரத்துக்கு 24 ஆயிரத்து 634 கோடி செலவில் 2030-31இல் முடியும் வகையில் வர்தா-புசவால் மூன்றாவது நான்காவது பாதைகள்; குந்தியா- தங்கர்க்கர் நாலாவது பாதை; இட்டார் சி -போபால்- பினா நாலாவது பாதை இவற்றுக்கு பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா மத்திய பிரதேஷ் குஜராத் சட்டிஸ்கர் மாநிலங்களின் 3633 கிராமங்களை தாண்டி செல்லும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பக்தியார் பூர்- ராஜ்கீர்- திலையா ரெட்டை பாதை திட்டம் 1434 கிராமங்களை கடந்து செல்லும் பீகாருக்கான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது .பீகார் ஜார்கண்ட் மேற்குவங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகல்பூர்- தம் கா- ராம்பூர் ஹட் இரட்டை பாதை திட்டம் 3169 கோடியில் ஆகிய அனைத்தும் நிதிநிலை அறிக்கை முன்பே அனுமதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் 10 புதிய பாதை திட்டங்களுக்கும் மூன்று ரெட்டை பாதை திட்டங்களுக்கும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கும் மோடி அரசு தமிழகத்துக்கு இந்த பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டத்தில் ஒரு திட்டத்தையும் சேர்க்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவர்கள் ஏற்கனவே 2021- 51 காலகட்டத்தில் 38.5 லட்சம் கோடி செலவு செய்து தேசிய ரயில் திட்டம் அமல்படுத்தப் போவதாக அறிவித்தார்கள். அதனை மூடிவிட்டு இப்போது பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தை அமல்படுத்துகிறார்கள். இந்த திட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி திட்டங்களை அமல்படுத்துகிறார்கள். இவர்கள் செய்யும் அநியாயங்களை அறிந்து கொள்ள முடியாத வகையில் பிங்க் புத்தகத்தை ஒழித்து விட்டார்கள். தனித்தனியே திட்டங்களை நிதிநிலை அறிக்கைக்கு வெளியே வெளியிட்டு தகவலை மறைத்து பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இதனை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






