மு.க.ஸ்டாலின்

“கார்ப்பரேட்டுக்கு நாட்டை விற்றவர்கள் நாட்டுப்பற்றை விளக்க வேண்டியதில்லை” - மோடி அரசை சாடிய மு.க.ஸ்டாலின்

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தான் நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அது உண்மையல்ல என்று தமிழகம் மீட்போம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“கார்ப்பரேட்டுக்கு நாட்டை விற்றவர்கள் நாட்டுப்பற்றை விளக்க வேண்டியதில்லை” - மோடி அரசை சாடிய மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எடப்பாடி பழனிசாமி , எஸ்.பி வேலுமணி , தங்கமணி , உடுமலை ராதாகிருஷ்ணன் , கருப்பணன் போன்றோர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்ற போதும் எத்தனையோ திட்டங்களை கொங்கு பகுதிகளுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் மீட்போம் என்ற தி.மு.கவின் காணொளி வாயிலான பிரச்சாரம் இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் உடப்ட மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் காணொளி கூட்டம் நடைபெற்றது. திருப்பூரின் மத்திய மாவட்ட பொருப்பாளர் க.செல்வராஜ், வடக்கு , கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் , உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களும் , திமுக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா , சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பின்னர் காணொளி வாயிலாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , திருப்பூரில் ரிங் ரோடு , பாலங்கள் கட்டும் பணிகள் திமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் அவை நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறினார். மேலும், தொழிலாளர்களின் உடல் நலன் காக்க தற்போது வரை திருப்பூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை உருவாக்காமல் உள்ளதாகவும், சிறு குறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் திணறி வருவதற்கு முழு காரணம் மத்திய மாநில அரசுகள் தான் என்றும் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன் போன்றோர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்ற போதும் எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை என்றவர், அத்திக்கடவு அவிநாசி திட்டம் கலைஞரால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தான் நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அது உண்மையல்ல என்றும் கூறினார்.

எஸ்.பி வேலுமணி, தங்கமணி போன்றோர் சம்பாத்தியம் செய்வதில்தான் குறியாக உள்ளனர். மக்களுக்கு நலன் செய்யவில்லை. எஸ்.பி வேலுமணி உள்ளாட்சி துறையில் பல்வேறு டெண்டர்களில் முறைகேடு செய்து பணம் சேர்த்து வருகிறார். பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்துள்ளார். இவர் மீதான ஊழலை விசாரிக்கவே தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அரசியல் ரீதியாக விமர்சனம் செய்பவர்கள் மீதும் அதிகார அத்துமீறல் செய்கிறார். அதே போல் தரமில்லாத நிலக்கரி , மின் வாரியத்திற்கான உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் செய்து வருகிறார் அமைச்சர் தங்கமணி. முதலமைச்சருக்கும் , கல்வி அமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.

கல்வித்துறையில் முதல்வருக்கும் , அமைச்சருக்கும் பல்வேறு முரண்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு போராடியதற்காக அடித்து துன்புறுத்தியது எடப்பாடி பழனிசாமி. வேளாண் மசோதாவிற்கு ஆதரவு அளித்த விவசாயிகளின் பச்சை துரோகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றார். திருப்பூரில் தொழில் வளர்ச்சி பெரிதளவில் இல்லாமல் போக அரசுகளின் தவறான பொருளாதார கொள்கை தான் காரணம். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது டல் சிட்டியாக உள்ளது என்றவர், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற போவதாக செய்திகள் வருகிறது.

மத்தியல் பா.ஜ.க வந்ததில் இருந்தே தொழிலாளர்கள் விரோத கொள்கையையே கொண்டுள்ளதகாவும் விமர்சித்தார். கார்ப்பரேட்க்கு நாட்டை விற்பவர்கள், எங்களுக்கு நாட்டுப்பற்றை விளக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் விரும்பும் தேசத்தில் சாதி, மதம் இல்லாமல் எல்லார்க்கும் எல்லாம் என்பதே என்று கூறியதுடன் , திமுக ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழில் துறையை சேர்ந்த வல்லுநர் குழு ஒன்றை உருவாக்கி , அவர்கள் சொல்லும் ஆலோசனையின் பேரில் தொழில் சிறக்க ஆட்சி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

banner

Related Stories

Related Stories