இந்தியா

6 வயது மகனை கொன்ற கும்பலால் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டு ஆற்றில் வீச்சு.. பீகாரில் கொடூரம்

பீகார் மாநிலத்தில் 6 வயது குழந்தையைக் கொன்று தாயை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 வயது மகனை கொன்ற கும்பலால் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டு ஆற்றில் வீச்சு.. பீகாரில் கொடூரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகாரின் பக்சார் மாவட்டத்தில் உள்ள ஒஜாகா பரான் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனுடன் வங்கிக்கு சென்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

அதன் பிறகு அந்த குழந்தையை தாக்கிய கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இதனை வெளியில் கூறிவிடக் கூடாது என்பதற்காக குழந்தை தாய் இருவரையும் கட்டிப்போட்டு அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு தப்பித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து ஆற்றில் அலறல் சத்தம் கேட்டு கிராமத்து மக்கள் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். ஆனால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த 6 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட எழுவரில் இருவர் அடையாளம் காணப்பட்டு அதில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குற்றங்கள் வட மாநிலங்களிலேயே பெரும்பாலும் நடந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் கொடூரத்தில் அதிர்வலைகள் ஓயாத நிலையில் தற்போது தாய் ஒருவரும் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories