இந்தியா

உ.பி-யில் மீண்டும் தொடரும் பாலியல் குற்றங்கள் - நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை !

பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யில் மீண்டும் தொடரும் பாலியல் குற்றங்கள் - நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை !
hwnews
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமிகள், இளம்பெண்கள் குண்டர்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இச்சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மற்றும் பல்ராம்பூரில் கும்பல் பாலியல் பலாத்காரத்தால் 2 பெண்கள் கொல்லப்பட்டனர். இதனிடையே தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உ.பி.யில்தான் அதிகம் என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் குற்றங்களினால் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் அந்த மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யில் மீண்டும் தொடரும் பாலியல் குற்றங்கள் - நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை !

உத்தர பிரதேசம் மாநிலம் ஹாடோய் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி சண்டிலா நகரில் உள்ள டியூசனுக்கு சென்றுள்ளார். அப்போது தனது டியூசன் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்றபோது, ஆசிரியரின் சகோதரர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்க அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டதோடு, இளைஞரையும் போலிஸிடன் ஒப்படைத்தனர். இதனிடையடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், சிறுமியின் பெற்றோர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், அந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதேப்போன்று உத்தர பிரதேசம் நொய்டாவில் 12 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உ.பி-யில் மீண்டும் தொடரும் பாலியல் குற்றங்கள் - நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை !

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டா மாவட்டம் தாத்ரி பகுதியில் 13 வயது சிறுமியை அதேப்பகுதியைச் சேர்ந்த மூன்று கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் சிறுமி அலறிய போது, அவரைக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்துள்ள அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் சிறுமியை தங்களின் வீட்டில் வந்து விளையாடும் படி அழைத்துச் சென்று இத்தகைய கொடூரத்தைச் செய்ததாக போலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

உத்தர பிரதேசத்தில் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பத்தைத் தொடர்ந்து சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற முடியாத யோகி ஆதித்யநாத் உடனே பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்திவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories