இந்தியா

ம.பி-யில் மற்றொரு கொடூரம் : வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு!

மத்திய பிரதேசத்தில் தம்பியுடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி-யில் மற்றொரு கொடூரம் : வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாடுமுழுவதும் வெகுவாக அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 19 வயதான தலித் பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமாநில பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்தி மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம் கார்கோனே மாவட்டத்தில் உள்ள மருகார் கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில் தனது தம்பியுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

வயல்வெளியில் இருந்து ஒதுக்குப்புறமாக வீடு இருந்ததைக் கண்ட மூன்று பேர் குடிசைக்குள் இருந்த சிறுமியை கடத்தத் திட்டமிட்டு குடிசைக்குள் நுழைந்துள்ளனர். யாரோ வரும் சத்தம் கேட்டு சிறுமி அலற சிறுமியின் தம்பியும் எழுந்துள்ளார்.

ம.பி-யில் மற்றொரு கொடூரம் : வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு!

அப்போது வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேரும் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். சிறுமி அவர்களிடமிருந்து தப்பிக்கப் போராடியதால் அவரைக் கடுமையாகத் தாக்கி இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது உடன் இருந்த சிறுமியின் தம்பி அவர்களை தடுக்க முன்றபோது அவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனிடையே அந்தச் சிறுவன் ஓடிச் சென்று கிராம மக்களை அழைத்து வந்துள்ளார்.

கிராமத்தினர் வருவதை அறிந்த மூவரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயத்துடன் வயலில் கிடந்த சிறுமியை மீட்டு அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த போலிஸார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். தம்பியுடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories