இந்தியா

ஹத்ராஸ் சம்பவம் தணிவதற்குள் உ.பியில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவால் பலி இதுதான் ராம ராஜ்ஜியமா?

உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்திருக்கிறார்.

ஹத்ராஸ் சம்பவம் தணிவதற்குள் உ.பியில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவால் பலி இதுதான் ராம ராஜ்ஜியமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டிலேயே குற்றச்செயல்களின் கூடாரமாக பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் விளங்கி வருவதற்கு ஏராளமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அன்றாடம் தலைப்புச் செய்தியாகிவிட்டது.

அவ்வகையில் உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற பகுதியில் வயல்வெளியில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டியலனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கடந்தப்பட்டு கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியதோடு, யாரிடமும் கூறிவிடக் கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் நாக்கை அறுத்து, அவரது கழுத்து, முதுகு பகுதியில் கடுமையாக தாக்கியதன் விளைவாக கொடூரமான ரத்த காயங்களுடன் சாலையில் அந்த கயவர்கள் வீசியிருக்கிறார்கள்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். அதன் பிறகு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலைக் கூட பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அவர்களை வீட்டில் அடைத்துவிட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை போலிஸாரே எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் வெப்பம் தணிவதற்குள் பல்ராம்பூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் (செப்.,29) மாநில 22 வயது தலித் பெண் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் வேளையில் கும்பல் ஒரு அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மேலும், அந்த பெண்ணை கடுமையாக தாக்கவும் செய்திருக்கிறார்கள். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ஒரு சிறுவன் உட்பட இருவரை போலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேப்போன்று ஜியான்பூர் பகுதியில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்திருப்பதாகவும் போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களை குறி வைத்து ஆதிக்கச் சாதியினர் தொடர்ந்து இது போன்ற கொடூரங்களை நிகழ்த்தி வருவதற்கு மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர் மத்தியிலும் பெரும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

ராம ராஜ்ஜியம் எனக் கூறிக்கொண்டு அப்பாவி பெண்களை வல்லுறவுக்கு இரையாக்கி வருகின்றனர் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories