இந்தியா

பிரஷாந்த் பூஷனின் 2009ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரஷாந்த் பூஷன் மீதான 2009 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புதிய நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரஷாந்த் பூஷனின் 2009ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறித்து பிரபல மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட்களை பதிவிட்டதன் பேரில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

இதனிடையே, முன்னதாக பிரஷாந்த் பூஷன் 2009 ஆண்டு டெகல்கா பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நீதிபதிகளின் ஊழல் குறித்துப் பேசியிருந்தார். அதற்காக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதனை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிபதிகள், நீதிபதிகளுக்கு எதிரான ஊழலை பொதுவெளியில் வெளியிட முடியுமா, அப்படி வெளியிடுவதாக இருந்தால் எத்தகைய சுழலில் வெளியிட முடியும், அதற்கான வழிமுறை என்ன என்பதை நீதிமன்றம் முடிவு செய்யப் போவதாக அறுவித்தனர்.

பிரஷாந்த் பூஷனின் 2009ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

இதனைத் தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிரஷாந்த் பூஷன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், இது முக்கிய வழக்கு என்பதால் வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதற்கு முன்னதாக மத்திய அரசின் அட்டணி ஜெனரலின் கருத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதி அருண்மிஸ்ரா, தாம் ஓய்வுபெற இருப்பதால் நீண்ட நாடகள் வழக்கை விசாரிக்க இயலாது என்று குறிப்பிட்டார். ஆனால், பிரஷாந்த் பூஷன் வழக்கறிஞர் இந்த வழக்கில் பல அரசியல் சாசன அம்சங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி அருண்மிஸ்ரா, நீதிமன்றத்துக்கு மக்கள் நிவாரணம் தேடிவருகிறார்கள் என்பதை வழக்கறிஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

பிரஷாந்த் பூஷனின் 2009ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதற்கு பிரசாந்த் பூஷன் வழக்கறிஞர், நிவாரணம் மட்டுமல்ல நீதியையும் தேடி வருகிறார்கள் என்பது தனது கருத்து என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டு, செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதே அமர்வு இன்னும் சற்று நேரத்தில் பிரஷாந்த் பூஷன் மீதான மற்றொரு அவமதிப்பு வழக்கை இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்க உள்ளது.

banner

Related Stories

Related Stories