இந்தியா

“மன்னிப்புக் கோர முடியாது என பிராந்த் பூஷன் வாதம்” : முடிவை மறுபரிசீலனை உச்சநீதிமன்றம் அவகாசம் !

நீதிமன்ற அவமதிப்பு புகாருக்கு மன்னிப்புக் கோர முடியாது என்ற பிராந்த் பூஷன் முடிவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் மூன்று நாள் அவகாசம் வழங்கி தீர்ப்பை வழக்கை ஒத்திவைத்துள்ளது.

“மன்னிப்புக் கோர முடியாது என பிராந்த் பூஷன் வாதம்” : முடிவை மறுபரிசீலனை உச்சநீதிமன்றம் அவகாசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறித்து பிரபல மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட்களை பதிவிட்டதன் பேரில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து பிரசாந்த் பூஷனின் பதில்களில் திருப்தியடையாத உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று அறிவித்தது. அவருக்கான தண்டனை குறித்த வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, பிரசாந்த் பூஷன் தரப்பு வழக்கறிஞர், பிரசாந்த் பூஷனின் கருத்தை நீதிமன்றத்தில் வாசித்தார். அதில், “நீதிமன்ற அவமதிப்பு புகாருக்கு மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. நீதிமன்றம் தனக்குக் கருணை காட்டத் தேவை இல்லை; சட்டபூர்வமாக தண்டணை வழங்கப்பட்டால் அதனை ஏற்க தயார்” என இருப்பதாக தெரிவித்திருந்தார்.

“மன்னிப்புக் கோர முடியாது என பிராந்த் பூஷன் வாதம்” : முடிவை மறுபரிசீலனை உச்சநீதிமன்றம் அவகாசம் !

இதனைத்தொடந்து வாதிட்ட பூஷன் வழக்கறிஞர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ஆதரவாக கருத்து தெரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த 6 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கும், வழக்கறிஞர்களுக்கும் மிகவும் கடினமான நாட்களாக இருந்தது. ஒரு நாள் வரலாறு இதனை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கும் என்று கூறினார்.

இறுதியில் கருத்து தெரிவித்த அட்டர்ணி ஜெனரல் கே.கே.வேணுகோபால், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகு தண்டணை வழங்க வேண்டாம் என்று கூறினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிரசாந்த் பூஷன் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய மூன்று நாள் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில், வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

banner

Related Stories

Related Stories