இந்தியா

‘ நாட்டின் பொருளாதாரம் முடங்குவதற்கான காரணம் என்ன?’: மன்மோகன் சிங் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

இந்தியாவில் பொருளாதாரத்தின் நிலை ஆழமான கவலையை ஏற்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சி முன்பு இருந்ததைவிட பலமடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழில் துறையின் இத்தகைய வீழ்ச்சிக்கு மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டின் சிறு தொழில் உற்பத்தி முற்றிலுமாக செயலிழந்துப்போனது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், “இந்தியாவில் பெருளாதாரத்தின் இந்த நிலை ஆழமான கவலையை ஏற்படுத்துகிறது. இதனை நான் எதிர்கட்சி உறுப்பினர் என்ற முறையில் கூறவில்லை. இந்திய நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவன் என்ற முறையிலேயே கூறுகிறேன்.

‘ நாட்டின் பொருளாதாரம்  முடங்குவதற்கான காரணம் என்ன?’: மன்மோகன் சிங் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

அதுமட்டுமின்றி, பொருளாதார மந்த நிலைக்கு சில உண்மைகளே சாட்சிகளாகியுள்ளன. குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே சரிந்துள்ளது.

அதனால் வேலையின்மை 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளது. மின் உற்பத்தில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவு, வங்கி வராக் கடன் எப்போதும் இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது.

இதுபோல வளர்ச்சி பாதையில் கீழே போயிருப்பவற்றின் பட்டியல் நீள்கிறது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதையே இது காட்டுவதாகவும், வருத்தம் தரும் இத்தகைய புள்ளிவிவரங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழில் முனைவோரிடம், வங்கியாளர்களிடம், தொழிலதிபர்களிடம் அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், மக்களுக்குள்ள அவநம்பிக்கையும், அச்சமும், நம்பிக்கையின்மையும், நீடித்த மந்த நிலைக்கு காரணமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் “தொழில்துறையினர், வர்த்தகர்கள் மீதான சந்தேகங்களை போக்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் பிரதமர் மோடி ஏற்படுத்த வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories